ஊட்டி
கடல்மட்டத்திற்குமேல் : 2240 மீஉயரம்
இடம் : நீலகிரிமாவட்டம், தமிழ்நாடு.
மக்கள்தொகை : 1,91,960.
குடும்பங்கள் : 52,767
நிறுவப்பட்டது : 1819
நிலப்பரப்பு : 36 கிமீசதுரம்
சீதோஷ்ணம் : 10.6 – 22. 9 டிகிரிசெல்சியஸ்.
ஆயிரத்துதொள்ளாயிரத்துதொண்ணூற்றுஒன்பதில், நீலகிரிமாவட்டக்கலெக்டராகஇருந்ததிருமதிஸுப்ரியாஸாஹுவிற்குஓர்மாறுபட்டஅனுபவம்கிடைத்தது. அவரும்அவருடையகுழுவினரும்மலைப்பிரதேசத்தில்நிறையஇறந்தமிருகங்களின்உடல்களைக்கண்டனர் – பசுக்கள், யானைகள், மற்றும்பல – அவைஇறந்தகாரணத்தைஆராயும்போதுஅம்மிருகங்களின்வயிற்றுக்குள்பிளாஸ்டிக்பைகளும்மற்றபிளாஸ்டிக்கழிவுகளும்அடைத்திருந்ததைக்கண்டனர். இதுவரைபார்த்திராதஇக்காட்சியால்கவலையுற்றஅவர், தனதுஅதிகாரிகள்எல்லோரையும்அழைத்துஇதற்குத்தீர்வுகாணவேண்டிஆலோசனைநடத்தினார். அப்போதுவனவிலங்குகளுக்குமனிதர்களால்ஏற்படும்பாதிப்புகளைப்பற்றிவிழிப்புணர்வுஏதும்இல்லாததால், இவ்விதமானநிகழ்வுகளுக்குஎன்னசெய்யவேண்டும்என்றநடைமுறைஏதுமில்லை; தவிரயாருக்கும்எந்தவிதமானஆக்கபூர்வமானகருத்துமில்லை.
“சிலபஞ்சாயத்துகளையும், அரசுசாராஅமைப்புகளையும்கூட்டி, ஒருகுழுஅமைத்து, பலஆலோசனைகளுக்குப்பின், நீலகிரியில்பிளாஸ்டிக்கைத்தடைசெய்வதாகஓர்கெஜட்அறிக்கைவெளியிட்டோம்; குறிப்பாக – பிளாஸ்டிக்கினால்தயாரித்தகப்புகள், தட்டுகள், பாட்டில்கள், பைகள். அந்தக்காலத்தில், எங்கும்வழக்கத்தில்இல்லாதஇத்தகையகடுமையானதடையால், வர்த்தகர்களிடமிருந்தும், உணவகங்கள்நடத்துவோரிடமிருந்தும்ஏகப்பட்டஎதிர்ப்புக்கள்கிளம்பின,” என்கிறார், தற்போதுசுற்றுச்சூழல் / வனத்துறை / பருவநிலைமாற்றம்முதலியதுறைகளின்முதன்மைச்செயலாளரானதிருமதிசுப்ரியாசாஹூ.
ஊட்டியின்கழிவுமேலாண்மையில்ஈடுபட்டுள்ள “ ஊட்டியைஅழகாக்கும்குழு “ வின்அமைப்பாளரானஷோபனாசந்திரசேகர்கூறுவதாவது – “ பத்துப்பதினைந்துவருடங்களுக்குமுன்கழிவுமேலாண்மைஎன்பதுஇருந்ததேஇல்லை; ஊரில்நிறையஇடங்களில்குப்பைத்தொட்டிகள்இருக்கும் – ஆனால்அவற்றில்எல்லாவிதமானகழிவுகளும்கலந்துஇருக்கும்; தவிரஎல்லாத்தொட்டிகளுமேநிரம்பிவழிந்துகொண்டிருக்கும். நாங்கள்கொணர்ந்தபிளாஸ்டிக்தடைஎன்பதுகுறிப்பிட்டதடிமனுள்ளபிளாஸ்டிக்கினால்தயாரிக்கப்பட்டபொருட்களுக்குமட்டுமே; ஆனால்எவ்விதமானபிளாஸ்டிக்குமேகேடுவிளைவிக்கும்என்றுபுரிந்ததால், கர்நாடகமானிலம்ஏற்கனவேகொணர்ந்திருந்தபிளாஸ்டிக்தடைச்சட்டத்துடன்ஒப்பிட்டுஎங்கள்குறியீடுகளுடன்பாலிப்ரொபிலீனையும்சேர்த்துவிட்டோம்.”
இப்பணியில்பங்கேற்றஎல்லோரும்ஒன்றுசேர்ந்து, 2005 ல்ஒருகண்காட்சிநடத்தினர். அதில்ஹோட்டல்உரிமையாளர்கள், உணவகங்கள்நடத்துவோர், பிளாஸ்டிக்கிற்குமாற்றாகசணல்பைகள், மாதவிடாய்கோப்பைகள்முதலியவற்றைத்தயாரிப்போரும்பங்குகொண்டனர்.
பிளாஸ்டிக்தடையின்ஆரம்பகாலத்தில்ஆய்வுசெய்யும்குழுக்களில்அரசாங்கஅதிகாரிகள்மட்டுமேஇருந்தனர். “ எதுதடைசெய்யப்பட்டது, எதற்குத்தடையில்லைஎன்பதுபற்றிப்புரிதல்இல்லாமலிருந்தது; ஆய்வுசெய்வோர்ஒருகடைக்குள்சென்றால், அங்குகெட்டியானபிளாஸ்டிக்டப்பாக்களில்சாக்லேட்டுகள்விற்பனைசெய்யப்படுவதைகண்டுஅதற்குஅபராதம்விதித்தனர் – ஆனால்அந்தவகைப்பிளாஸ்டிக்கிற்குத்தடைவிதித்திருக்கப்படவில்லை. இப்போதுஒருமூலக்குழுஉருவாக்கி, பிளாஸ்டிக்உபயோகத்தைசீர்படுத்திஇருக்கிறோம் “ – என்றுகூறுகிறார், திருமதிஷோபாசந்திரசேகர்அவர்கள். இக்குழுவானது, தாங்கள்முதலில்ஆய்வுநடத்திப்பின்அரசாங்கஅதிகாரிகள்தடைசெய்யப்பட்டபொருட்களைப்பறிமுதல்செய்யஉதவுகின்றனர்.
ஊட்டியைஅழகுபடுத்தும்முயற்சியின்விரிவானதிட்டத்தைப்பற்றிக்கூறுகிறார், முதன்மைச்செயலாளர்திருமதிசுப்ரியாசாஹு : “ எல்லாப்பள்ளிகளிலும்சுற்றுச்சூழல்குழுக்கள்அமைத்தோம் ; நீலகிரிமாவட்டத்திற்குள்வரும்எல்லாப்பாதைகளிலும்தடுப்புக்கள்அமைத்துஆங்காங்கே “ ஊட்டியின்பசுமைப்போராளி “ களைஇருத்தி, வரும்சுற்றுலாப்பயணியரிடமிருந்துபிளாஸ்டிக்பைகளைப்பறிமுதல்செய்துமாற்றாகசணல்பைகளைத்தந்தோம் – இச்சணல்பைகளைபாரதஸ்டேட்வங்கிதந்துஉதவியது. உள்ளேவரும்வாகனங்களில் “ பிளாஸ்டிக்இல்லாநீலகிரிக்குவருவதற்குப்பெருமைப்படுகிறோம் “ என்றெழுதியஸ்டிக்கர்களைஒட்டினோம்.”
இரண்டாயிரத்துப்பதினேழில், திருமதிஇன்னோசென்ட்திவ்யா, நீலகிரிமாவட்டஆட்சியாளராகப்பதவியேற்றார். “ உன்னதஉதகை” என்னும்பெயரில், பத்துஅம்சத்திட்டம்ஒன்றைத்தயாரித்தார். இது, மக்கள்இணைந்துசெயல்படுமாறுஅமைக்கப்பட்டது – நுணுக்கமாகக்கழிவுகள்தரம்பிரிக்கப்பட்டு, உலர்ந்தகெட்டிக்கழிவுகளும்நல்லமுறையில்மறுசுழற்சிசெய்யப்பட்டன. இத்திட்டம், தமிழகஅரசின் 2018க்கானபசுமைவிருதைப்பெற்றது. திருமதிதிவ்யாதற்போதும்நீலகிரிமாவட்டஆட்சியாளராகஇருக்கிறார். குன்னூரும்அவரதுமாவட்ட்த்தில்அடங்கும். –
“ இன்றையநிலவரப்படி, பதினெட்டுவகைப்பிளாஸ்டிக்கள்தடைசெய்யப்பட்டுள்ளன. தற்சமயம்எங்கள்பணியாளர்களிடம், உணவுபொதிந்துவரும்பிளாஸ்டிக்டப்பாக்கள்தான்கழிவாகவருகிறது – இதற்குசுற்றுச்சூழலுக்குப்பொருந்தும்வகையில்மாற்றுதேடிக்கொண்டிருக்கிறோம். குடிநீருக்குப்பயன்படுத்தும்ஐந்துலிட்டர்கொள்ளளவு [ அல்லதுஅதற்குமேல்அளவுள்ள ] கேன்களுக்குத்தடைஇல்லை, அவற்றுக்குக்அதிகஅளவுடெபொசிட்கொடுக்கவேண்டிஇருப்பதால்விலைஅதிகரிக்கிறது” – என்றுகூறுகிறார்அவர்.
தற்போது, அறுபத்துநான்குஇடங்களில்குடிநீர்ஏடிஎம்கள்அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைஒரேநிறுவனம்இயக்கிவருகிறது. – லிட்டருக்குஐந்துரூபாய்என்றவிலையில்மக்கள்இவற்றிலிருந்துகுடிநீர்பெற்றுக்கொள்ளமுடியும். தவிர, வாரமொருமுறை “வியாழனன்றுநீலகிரியைபெருக்கிச்சுத்தப்படுத்துவோம் “ என்கிறதிட்டத்தில்அரசாங்கஅதிகாரிகளும்பொதுமக்களும்ஒருங்கிணைந்துதினப்படிகழிவுசேகரிக்கக்கடினமானமலைப்பகுதிகளைச்சுத்தம்செய்கிறார்கள்.
“ திட்டங்கள்போடலாம்; சட்டங்கள்இயற்றலாம் – ஆனால்அவைஅமல்படுத்தப்படவேண்டும் – அதுதான்முக்கியம். சட்டதிட்டங்களைமதியாமல்மீறுவோர்மீதுஅபராதம்விதிக்க “ பசுமைக்குழு” க்களைஅமைத்தோம். முதல்ஆறுமாதங்களுக்குஇதைமிகத்தீவிரமாகக்கடைப்பிடித்ததில், வரைமுறைகள்நன்குஉருவாகிவிட்டன. தற்சமயம், நாங்கள்மக்கள்விதிதளராமலிருக்கும்வகையில்தான்ரெய்டுகள்நடத்தவேண்டியிருக்கிறது. மலைப்பிரதேசநகராட்சிகள்எல்லாமே, தங்களதுநிதியில்கால்பங்காவதுகழிவுமேலாண்மைக்குஒதுக்கிவைக்கவேண்டும்என்றேநான்எண்ணுகிறேன் – தற்போதுஅதுஐந்துசதவிகிதத்திற்கும்குறைவாகஉள்ளது ; இதனால், பணியாளர்நியமனத்தில்சுணக்கம்ஏற்பட்டு, ஒருவரேகிட்டத்தட்டநூற்றிஐம்பதுவீடுகளில்இருந்துகுப்பைசேகரிக்கவேண்டியிருக்கிறது. தவிர, மலைப்பாதைகளின்ஏற்றஇறக்கங்களில்சென்றுகுப்பைஎடுப்பதற்கும்பணம்அதிகமாகச்செலவழிக்கவேண்டிஉள்ளது “ என்றுகூறுகிறார்மாவட்டஆட்சியாளர்திருமதிதிவ்யா.
இங்குநாங்கள்கற்றறிந்தது : தினப்படிகுப்பைசேகரிப்பவர்களுக்கு, மக்களும்மற்றவர்களும்தம்மாலியன்றஅளவுஒத்துழைப்புத்தரவேண்டியதுஅவசியம்.
எங்களதுகண்ணோட்டத்தில்பொதுவாகஅறியப்பட்டபாடங்கள்என்னஎன்பதையும்மலைப்பிரதேசங்களிலுள்ளமற்றசவால்களையும்பற்றிஅறியகீழேஉள்ளஒவ்வொருஊரின்பெயரையும்க்ளிக்செய்துதெரிந்துகொள்ளுங்கள்.
ஆசிரியர் : ஜேகப் செரியன்.
தமிழாக்கம் : காமாக்ஷி நாராயணன்.