குன்னூர்
உயரம்: கடல் மட்டத்திலிருந்து 1850 மீ.
இடம் : நீலகிரி மாவட்டம், தமிழ் நாடு
மக்கள்தொகை : 14,178
குடும்பங்கள் : 4,20
நிறுவப்பட்டது : 1866
நிலப்பரப்பு : 15.05 சதுர கிமீ
சீதோஷ்ணம் : 15.4 – 30 டிகிரி செல்சியஸ்
சில வருடங்களுக்கு முன்வரை, குன்னூரில் ஊரின் நடுவே ஓர் குப்பைக்கிடங்கும் கழிவு நீரோடை ஒன்றுமிருந்தன. குன்னூர் வளமீட்பு மையத்தில் பணிபுரியும் டாக்டர் வசந்தன், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அந்தக் கழிவுகளின் துர்நாற்றம் வீசும் என்கிறார். இன்று அந்தக் குப்பைக்கிடங்கு ஓர் அழகிய பூங்காவாக மாறியது மட்டுமின்றி , வளமீட்பு மையமே அங்குதானிருக்கிறது. அந்த இடம் இவ்வளவு நன்றாக மாறி விட்டதால், அங்கு நிலமதிப்பு பலமடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார், வசந்தன்.
“ சுத்தமான குன்னூர்” – எனும் அமைப்பு2014ல் ஆரம்பிக்கப்பட்டது. சில நகர மக்கள், ஒரு தீபாவளிக்குப்பின் ஒருமித்துவந்த சுற்றுலாபயணியர் விட்டுச்சென்ற உணவுப்பண்டங்கள் பொதிந்து வந்த பேப்பர்,ப்ளாஸ்டிக் குப்பைகளையும் பட்டாசுக்கழிவுகளையும் அகற்றிச் சுத்தம் செய்ய முயன்றனர். அதன் எதிரொலியாகப்பல இடங்களில், சிறுஒடைகள், பாலங்கள்,மலைப்பகுதிகள் ஆகிய இடங்களையும் சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 2014 லிருந்து 2019 வரை சிறிய அளவில் இருந்தது இம்முயற்சி. 2019 வேனற்காலத்தில், ஊரின் நடுவே ஓடும் ஓடையைச்சீரமைக்கும் பெரும்பணி ஆரம்பித்தபோது வளர்ந்தது. சிறியஅளவில் நகரச்சீரமைப்புப்பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், ஓடையைச் சுத்தப்படுத்தியதன் மூலம், நகரமே மிகப்பெரிய அளவில் மாறி விட்டதெனக்கொள்ளலாம்.
“இந்த ஓடையிலிருந்து 50 – 60 வருடங்களாகச் சேர்ந்திருந்த கிட்டத்தட்ட பதினெட்டாயிரம்டன் கழிவுகளை எடுத்திருக்கிறோம் என்கிறார் சுத்தமான குன்னூர் அமைப்பின் நிர்வாகியான சமந்தா ஐயண்ணா. இவர்களுக்குத் தன்னார்வலத் தொண்டர்கள் நிறைய இருக்கின்றனர் ; ஆனால் போதுமான நிதியுதவி இல்லை. இங்குதான் அதிர்ஷ்டம் அடித்தது – பரோபகாரி ஒருவர் முன்வந்து ஓடையைச் சுத்தம் செய்யும் செலவு மொத்தமும் தான் ஒருவரே ஏற்றுக்கோண்டார்.
இந்த முயற்சியால், ஒரு நல்ல செயல் திட்டம் உருவாக்க முடிந்தது – அரசாங்க அதிகாரிகளுக்கும் நிதி உதவி செய்ய முன்வருவோர்க்கும் இடையே நம்பிக்கை வளர்ந்தது. குப்பைக்கிடங்காகக் கிடந்த பன்னிரண்டு ஏக்கர் நிலம் இடம் சுத்திகரிக்கப்பெற்று நல்லதோர் வளமீட்பு மையமாக மாற்றப்பட்டது – இதில் பாதிஇடத்தில் ஒரு ஏக்கருக்கு அழகிய தோட்டம் ,இரண்டு ஏக்கரளவில் புல்தரையும் சுற்றுச்சூழல் பூங்காவும், மற்ற இடத்தில் கழிவுமேலாண்மைக்கு உள்கட்டமைப்பும் பாதைகளும் என்று அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடமும் வருங்காலத்தில் சீரமைக்கப்படவிருக்கிறது.
ஓர் பெரிய நிறுவனம், கழிவுகளை எரிக்கத் தன் CSR நிதியிலிருந்து அடுப்பு கொடுத்துதவியது; இன்னொருவர், இங்குள்ள பணியாளர்களுக்குள்ள ஊதியத்தில் பாதிகொடுக்க முன்வந்தார். வளமீட்பு மையத்தை முன்னெடுத்துச் செல்லும் டாக்டர் வசந்தன், கழிவுகளை மறு சுழற்சி செய்வதால் கிடைக்கும் வருவாயிலிருந்தே அதனைச் செய்து கொள்வதே சிறந்தது, ஆனால் அந்த அளவைத் தாம் இன்னும் எட்டவில்லை என்று கூறுகிறார். ஒரு கிலோ கழிவைத் தரம் பிரித்து, பொதிந்து, வேறிடத்திற்கு அனுப்ப இரண்டரை ரூபாய் செலவாகிறது – அதிலிருந்து வெறும் நாற்பது பைசாவே கிடைக்கும் – பிளாஸ்டிக்கிலிருந்து எண்ணை தயாரிக்கும் பைரோலிஸிஸ் உலை இங்கு குன்னூரிலேயே இருக்குமானால் இதற்கு மிக உதவியாக இருக்கும்; இப்போது நாங்கள் எண்ணூறு கிமீதொலைவில் ஹைதராபாதிலுள்ள ஒரு உலைக்கு அனுப்புகிறோம் – அவர் எங்களிடமிருந்து ஒரு ரூபாய் கொடுத்து வாங்குவதை,அங்கு எடுத்துச் செல்ல நான்கு ரூபாய் செலவழிக்கிறார்.” – என்று கூறுகிறார் டாக்டர் வசந்தன்.
பைரொலிஸிஸ் ஆலை ஒன்றிருந்தால், ஒவ்வொரு மாதமும் நான்கிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கொரோனா தொற்றால் குன்னூரின் வளமீட்பு மையத்திற்கு தினந்தோறும் நான்கு லட்சம் டன் கழிவுகளுக்குப் பதிலாக இரண்டேகால் லட்சம் டன்தான் வருகிறது – இதில்,கிட்ட்த்தட்ட இருபது சதவிகிதம் பிளாஸ்டிக், பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் பேப்பர், இன்னொரு பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் கண்ணாடி, ஐந்து சதம் துணி, தோல் கழிவுகள். மற்றவை மக்கும் பொருட்கள். இதனால் ஐம்பது சத மக்கும் குப்பையை உரமாக்கி கிலோஒருரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
ஊட்டியை விடக் குன்னூர் கிட்டத்தட்ட நானூறு மீட்டர் உயரம் குறைவு – இதனால் குளிரும் குறைவு குப்பைகளை மக்கச்செய்வது எளிதாகிறது என்கிறார், நீலகிரி மாவட்டஆட்சியாளர இன்னொசென்ட்திவ்யாஅவர்கள்.. தவிர, குன்னூரில்கழிவுமேலாண்மைக்கென இத்தகையதொரு பொதுமக்கள்/ தனியார் கூட்டமைப்பு இருப்பது, பணியாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்கும் மற்ற விதிமுறைகள் செய்வதற்கும் ஏதுவாக இருக்கிறது. துப்புரவுப்பணியாளர்களை வேலையிலமர்த்தமுடிகிறது; குப்பைகளும் கழிவுகளும் சேர்ந்துவிடாமலிருக்கிறது. இதைவிட முக்கியமானது – ஊட்டி, குன்னூரைவிடப் பத்துமடங்கு பெரிது என்பதே.
உள்கட்டமைப்பிலும் நிலப்பரப்பிலும் வேறுபாடுகளிருந்தாலும், மாவட்ட ஆட்சியர், அங்கேயே இருப்பது கழிவுமேலாண்மை ஏற்பாடுகளைப்பொறுத்தவரை குன்னூருக்கு ஓர் மிகப்பெரிய வரம். “கோடைக்கானலைப்பொறுத்தவரை உங்களது மாவட்ட ஆட்சியாளர் திண்டுக்கல்லில் இருக்கிறார் – எங்களுக்கோ ஆட்சியாளர் இங்கேயே இருப்பது மட்டுமில்லாமல் சுற்றுச் சூழலைப்பற்றி மிக்க ஆர்வத்துடனிருக்கிறர்.- என்கிறார் சமந்தா ஐயண்ணா.
மற்றச் சவால்களைப்பற்றிப்படிக்க :
எங்கள் கண்ணோட்டத்தில் மலைவாசஸ்தலங்களிலுள்ள பொதுவான விபரங்களையும், ஒவ்வொரு நகரத்திலும் கற்றுக்கொண்ட தனிப்பட்ட பாடங்களையும் அறிந்து கொள்ள கீழேயுள்ள ஒவ்வொரு ஊரின் பெயரையும் க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
முக்கியமானபாடம்: பொதுமக்கள் ஒன்று சேர்ந்தால் தான் மற்ற தனியார் இயக்கங்களைச்சேர்க்கமுடியும்.
ஆசிரியர் : ஜேகப் செரியன் .
தமிழாக்கம் : காமாக்ஷி நாராயணன்.