ஆசிரியர் : ரீனா ராகவமூர்த்தி.
1995 ம்வருடம், சுற்றுச்சூழல் சுத்தம் / மேலும் குப்பை மறுசுழற்சி, இவற்றில் ஆர்வமுள்ள எஞ்சினியர் அஜீத் மத்தாய் ஒரு பை நிறைய மண்புழுக்களுடன், பழனி மலைச்சாரலுக்கு வந்தார். நேராக திண்டுக்கல் கலெக்டரின் வீட்டிற்கு சென்ற அவர், குப்பைகளைச் சரிவர அகற்றி, எப்படி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு பணி செய்ய விரும்புவதாகக்கூறினார். மண்புழுக்கள் மூலம் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவிருப்பதாகக்கூறிய மத்தாய், பெங்களூரில் இருந்த ஃபார்மாசியா[ [PHARMACEA] என்ற உயிரியல் தொழில்நுட்ப [BIOTECHNOLOGY] நிறுவனத்தில் பணிபுரிகையில் கற்றுக்கொண்ட அத்திறனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தேடி வந்த அவர், கோடைக்கானலுக்கு குடிபெயர்ந்து, அடுத்த பத்து வருடங்களுக்கு இங்கு வசித்தார்.1995ம்வருடம், சுற்றுச்சூழல் சுத்தம் / மேலும் குப்பை மறுசுழற்சி, இவற்றில் ஆர்வமுள்ள எஞ்சினியர் அஜீத் மத்தாய் ஒரு பை நிறைய மண்புழுக்களுடன், பழனி மலைச்சாரலுக்கு வந்தார். நேராக திண்டுக்கல் கலெக்டரின் வீட்டிற்கு சென்ற அவர், குப்பைகளைச் சரிவர அகற்றி, எப்படி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு பணி செய்ய விரும்புவதாகக்கூறினார். மண்புழுக்கள் மூலம் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கவிருப்பதாகக்கூறிய மத்தாய், பெங்களூரில் இருந்த ஃபார்மாசியா[ [PHARMACEA] என்ற உயிரியல் தொழில்நுட்ப [BIOTECHNOLOGY] நிறுவனத்தில் பணிபுரிகையில் கற்றுக்கொண்ட அத்திறனைப் பயன்படுத்த சந்தர்ப்பம் தேடி வந்த அவர், கோடைக்கானலுக்கு குடிபெயர்ந்து, அடுத்த பத்து வருடங்களுக்கு இங்கு வசித்தார்.
பழனி மலைச்சாரல் மத்தாய்க்கு மிகவும் பிடித்தமான இடம்.1965 வருடத்திற்கு பிறகுபள்ளிச்சிறுவனாக இங்கு அடிக்கடி வந்திருக்கிறார். வரும்போதெல்லாம் மலைகளைச்சுற்றி பல இடங்களுக்கு நடந்து போன அனுபவம் உண்டு. தற்போது குப்பைக்கிடங்காக இருக்கும் பிரகாசபுரமும் அதில் ஒன்று – ஆனால் அப்போது இவ்வளவு அதிகமாக அங்கு குப்பை இருக்காது. அப்படியும், சுற்றுச்சூழலுக்கு அப்போதே பாதிப்பு வர ஆரம்பித்துவிட்டது – சோலைகளில் இருந்த புல்வெளிகளில் ஏற்கனவே இருந்த புற்களை அகற்றி கத்திச்சவுக்கு மரங்கள் அதிக அளவில் நட ஆரம்பித்துவிட்டனர்.
“முதலில் குப்பையைத் தரம் பிரிக்க மக்கள் பழகிக்கொள்வது மிக அவசியம். பிறகு. அப்பழக்கம் மக்களிடம் வேரூன்றி விட்டால், தரம் பிரித்து மேலாண்மை செய்வது சுலபம்.” என்று கூறுகிறார் மத்தாய். பழனி மலையிலுள்ள 400விவசாயிகளுடன் கை கோர்த்து அவர்களது வேளாண்மைப் பொருட்களை கோடைக்கானலிலும் மற்ற ஊர்களிலும், நகரங்களிலும் சந்தைப்படுத்தும் அவரது முயற்சி, கோவா வரை படர்ந்து பரவியது.
கோடைக்கானலில் கழிவு மேலாண்மை,[ WASTE MANAGEMENT], உயிர் இயக்கவியல் வேளாண்மை[BIODYNAMIC FARMING] முதலியவற்றில் தன்னை வெகுவாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த மத்தாய், மற்ற ஊர்களிலுள்ள விவசாயிகட்கு உதவும் பொருட்டு இங்கிருந்து சென்றார். அந்த சமயத்தில், கோடைக்கானலிலுள்ள கலெக்டர் மாறிவிட்டதால், இங்குள்ள மக்களை இவற்றில் ஈடுபடுத்த, நகராட்சிக்கு அவர் தந்த வேண்டுகோள்கள் நடைமுறைப்படுத்தமுடியாது போய்விட்டது.
நாங்கள் ஜூன் மாதம் அவரிடம் பேசியபோது, தற்போது, கோடைக்கானலில் கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், இனி இத்தகைய செயற்பாடுகள் தடையின்றி நடக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார். இப்போது அவர், திருவனந்தபுரத்தில், எம்பயோம்(mBYOM),என்கிற நிலையான உருமாற்ற ஆலோசனை சேவை ஒன்றை நடத்தி வருகிறார். திருவனந்தபுரம் நகராட்சியுடன் இணைந்து, ஒவ்வொரு வீட்டிற்கும்நுண்ணுயிர் கலந்த தேங்காய் நாருடன் கூடிய உரமிடும்தொட்டி கொடுத்து அதன் மூலம் கலப்பு உரம் அவர்களே தயாரித்துக்கொள்ளுமாறு செய்திருக்கிறார். மாநகராட்சி நடத்தும் “ குடும்பஸ்ரீ” எனும் சமூக கூட்டமைப்பின் மூலம் மக்காத குப்பைகள் எடுக்கப்பட்டுவிடுகின்றன ; மக்கும் குப்பைகள் அவரவர் வீடுகளிலேயே உரமாகி விடுகின்றன.
மத்தாய் கோடைக்கானலுக்கு வந்து சென்ற 26 வருடங்களில், இங்குபல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் முழுமையான தீர்வு ஏற்படவில்லை. – 42,000ம் பேர்களே குடியுள்ள இச்சிற்றூரில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதால் சேரும் திடக்கழிவுகளை அகற்றுவதில் ஒற்றுமையோடு செயலாற்றும் தன்மை இல்லாததால் சிக்கல்தான் ஏற்படுகிறது.
மத்தாய் கோடைக்கானலுக்கு வந்து சென்ற 26 வருடங்களில், இங்குபல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் முழுமையான தீர்வு ஏற்படவில்லை. – 42,000ம் பேர்களே குடியுள்ள இச்சிற்றூரில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதால் சேரும் திடக்கழிவுகளை அகற்றுவதில் ஒற்றுமையோடு செயலாற்றும் தன்மை இல்லாததால் சிக்கல்தான் ஏற்படுகிறது.
மத்தாய் கோடைக்கானலுக்கு வந்து சென்ற 26 வருடங்களில், இங்குபல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் முழுமையான தீர்வு ஏற்படவில்லை. – 42,000ம் பேர்களே குடியுள்ள இச்சிற்றூரில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருவதால் சேரும் திடக்கழிவுகளை அகற்றுவதில் ஒற்றுமையோடு செயலாற்றும் தன்மை இல்லாததால் சிக்கல்தான் ஏற்படுகிறது.
இங்குள்ள சமூக முயற்சி பற்றிய சிறு குறிப்பு ::
புது தில்லியிலிருந்து கோடைக்கானலுக்கு வந்து, இன்று, “என் பள்ளி சத்ய சுரபி” [MYSS] எனும் பள்ளியை ஆரம்பித்து நடத்தி வரும் திருமதி பத்மினி மணி கூறுவதாவது : “நான்1944ம் வருடம் இங்கு வந்தபோது, மனதிற்கு அமைதி தரும் இத்தகைய அழகிய சூழல் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால், நான் அப்போது வசித்த ஆப்சர்வேடரி சாலையில், எக்கச்சக்கமான மனிதக் கழிவுகளும், ப்ளாஸ்டிக் குப்பைகளும் மிக மனவருத்தத்தை தந்தன. அதன் விளைவாக, 1995ல் நான் கோடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்த போது, அங்கிருந்த, மாணவர்களுடன் சேர்ந்து எங்கள் வட்டாரத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டேன்” என்கிறார். அங்கிருந்த பெட்டிக்கடைகாரர்களிடமும், அவர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும், மாணவர்களோடு தாமும்கூடப் போய் அவரவரது இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வதின் அவசியத்தையும், அதனால் உண்டாகும் நன்மைகளையும் எடுத்துக்கூறி இருக்கிறார். 1999ல், பின்தங்கிய குழந்தைகளுக்கான தனது MYSS பள்ளியை ஆரம்பித்த பின்னர், திருமதி பத்மினி, அக்குழந்தைகளுக்கு சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் பொருட்டு, மாணவர்களை வகுப்பு ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னதாக வந்து, கையுறை அணிந்து பள்ளி வளாகத்திலும், சுற்றுவட்டாரத்திலும் குப்பைகள் ஏதுமிருப்பின் அவற்றை அகற்றும் பணியில் ஈடு படச் செய்திருக்கிறார். இதனால், “மாற்றத்திற்கான காரணி“ என்ற உலகளாவிய போட்டியில் முதல் எண்பது இடங்களுக்குள் இப்பள்ளி வந்து பரிசு பெற்றது.; 2016ம் வருடம் நடந்த “ஸ்வச் பாரத்” எனும் குறும்படப்போட்டியிலும் பங்கு பெற்றது.
கோடைக்கானலில் சென்ற சில மாதங்களாக சுற்றுலாப்பயணியர் குறைந்ததால், ஊர் பல மடங்கு சுத்தமாக இருக்கிறது. கோடைக்கானல் சர்வ தேசப்பள்ளி நடத்திய ஒரு சமீபத்திய ஆய்வில், நகராட்சி சேகரிக்கும் குப்பைகளில் எண்பது சத விகிதம் சுற்றுலா வருவோரும், சுற்றுலாச் சார்ந்த உணவு விடுதிகள், தங்குமிடங்கள், விருந்தினர் விடுதிகள், பள்ளிகள், முதலியவற்றின் மூலமாக உருவாவதே என்று தெரிய வந்துள்ளது. எதுவானாலும், சுற்றுலாப்பயணியர் வருகிறார்களோ இல்லையோ, குப்பை சேகரிப்பது முறையற்றதாக உள்ளதே காரணம் என்பதுதான் பலருடைய எண்ணம்.
கோடைக்கானலில் குப்பை சேகரித்து சுமாரான முறையில் மறு சுழற்சி செய்வோர் பலர் இருந்தாலும், பெருமாள்மலையிலும் மூஞ்சிக்கல்லிலும் இருக்கும் ஒரு சிலரே அதை ஒரு தொழில்முறையில் செய்கிறார்கள் – குறிப்பாக, ப. குணசேகரன் அவர்களில் ஒருவர். – கடந்த பதினைந்து வருடங்களாக கெட்டியான பிளாஸ்டிக், தகரம், தண்ணீர் கேன்கள், இரும்பு, எல்லாவிதமான பேப்பர்கள் முதலியவற்றை வீடுகள், எஸ்டேட்கள், மற்றக் கட்டுமான இடங்களிலிருந்து சேகரித்து, திண்டுக்கல் மதுரை போன்ற நகரங்களில் உள்ள மறுசுழற்சி செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு விற்கிறார். “கோடை மெட்டல்ஸ்“என்ற பெயரில் கடைவைத்திருக்கும் குணா, தனது மினி ட்ரக்கை பேத்துப்பாறை, அடுக்கம், கணேசபுரம், மற்ற சுற்று வட்டார கிராமங்கள், தவிர அவ்வப்போது கோடைக்கானலுக்கும் ஓட்டிச்சென்று கழிவுமேலாண்மையில் ஈடுபட்டு வருகிறார்.
தனது சிறு வயதிலேயே, குப்பையிலிருந்து உரம் தயாரிப்பதைக் கற்றுக்கொண்டுள்ள குணா, குப்பையைத் தரம் பிரிப்பதென்பது மிக மிக முக்கியம் என உணர்ந்தவர். “வெகு சிலர்தான் உணவுக்கழிவுகளையும் உலோகக்கழிவுகளையும் பிரித்துக் கொடுப்பர்; நானே பலரிடம் உணவுக்கழிவைப்பிரித்து உரம் தயாரித்து செடிகளுக்குப்போட அறிவுறுத்தியிருக்கிறேன்; எஞ்சிய கழிவுகளை வாங்கிக்கொள்வேன்“ என்கிற நாற்பது வயதான குணசேகரன், தனது வாடிக்கையாளர்களுக்காக பெரியகுளத்திலுள்ள குப்பைக்கிடங்கிலும் சிலவற்றைக் கொண்டு சேர்த்து விடுகிறார். கிருமி தாக்குதல் ஏற்படாமலிருக்க, குப்பையைக்கையாளும்போது எப்போதுமே கையுறை அணிந்து வேலை செய்யும் குணா, ஆறு மாதத்திற்கொருமுறை டெடானஸ் இஞ்ஜெக்ஷன் எடுத்துக்கொள்கிறார். இரண்டு வருடங்களாகப் பல உணவகங்களும், ஹோட்டல்களும் கோடைக்கானலில் அடைத்திருப்பதாலும், மற்றவரிடமிருந்து வரும் தொழிற்போட்டியாலும் அவரது வியாபாரத்தில் ஏற்பட்டிருக்கும் சுணக்கம், தற்போதைய ஆள்நடமாட்ட தடைகாரணமாக இன்னும் அதிகரித்திருக்கிறது.
குப்பையைக் குறைப்பதெப்படி :
கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியின் சுற்றுச்சூழல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் டாக்டர். ராஜமாணிக்கம், சுற்றுச்சூழல் மற்றும் மனிதநேய ஆராய்ச்சி மையத்தின் பொறுப்பதிகாரி. [PROJECT COORDINATOR, CENTRE FOR ENVIRONMENT AND HUMANITY, KIS] அவர் கூறுவதாவது, “நான் ஆரோவில்லில் பணியாற்றிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் – உள்ளூர்வாசிகள் தங்களைச் சுற்றியுள்ள இடங்களைச் சுத்தமாக வைத்துக்கொண்டால்தான், அங்கு வருவோரும் சுத்தமாக, குப்பைகளை அங்கங்கே வீசாமல் இருப்பார்கள்; சுற்றுலாப்பயணிகள் ஓரிடத்திற்கு வரும்போது, அவ்விடம் குப்பையும் கூளமுமாக இருப்பதைப்பார்த்தால், அவர்களும் அவ்விடத்தில் குப்பை போடுவதற்குத் தயங்க மாட்டார்கள். அதே, அவ்விடம் சுத்தமாக இருக்கும் பொருட்டு, நிச்சயமாக அவர்களுக்கும் அந்த இடத்தில் கழிவுகளை வீசத்தோன்றாது; சுத்தமாக இருக்குமிடத்தில், வருவோருக்கும் குப்பைத்தொட்டிகளைத்தேடி அதனை உபயோகிக்கத் தோன்றும், செய்யவும் செய்வார்கள்.”. கழிவு மேலாண்மை வல்லுனரான டாக்டர் ராஜமாணிக்கம், எந்தெந்த பொருட்கள் மறு சுழற்சிக்கு உகந்தவை, எவை அல்லாதவை என்பது பற்றி மக்களுக்கு ஆர்வத்துடன் எடுத்துரைத்து விழிப்புணர்வூட்டுகிறார்..
ஒவ்வொரு வாரமும், கோடைக்கானல் சர்வதேசப்பள்ளி (KIS),அறுபதிலிருந்து எழுபது கிலோ வரை உரம் தயாரிக்கிறது. இது பிரிக்கப்பட்ட கரிமக்கழிவுகளில் இருந்து வந்தது; தரம் பிரிக்கப்பட்டதால், பள்ளியில் சாதாரணமாகச் சேரும் மொத்தக்கழிவுகளின் அளவைக் குறைத்துவிடுகிறது; சென்ற மாதம், கோடை கிரானிகிள், டாக்டர்..ராஜமாணிக்கம் பணி புரியும் சுற்றுச்சூழல் மற்றும் மனிதநேய ஆராய்ச்சி மையத்திற்குச் சென்ற போது, அவர், ஒரு வாரத்தில் பலதரப்பட்டவர்கள் வசிக்கும் குடியிருப்புக்களிலிருந்து சேகரிக்கப்பட்ட திடக்கழிவுகளைக் காண்பித்தார் – இவற்றில் பேப்பர், பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்கள், ரப்பர், தோல், மற்றும் உலோகங்கள் என எண்பத்திஏழு விதமான பொருட்கள் இருந்தன; இவற்றில் நாற்பத்திநான்கு விதமானவை மறு சுழற்சி செய்யக்கூடியவை ; மீதமுள்ள நாற்பத்திமூன்று வேறிடத்திற்கு எடுத்துச்செல்லவேண்டியவை – இது பொருளாதார ரீதியாக நீடித்துச் செய்ய முடியாதது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் ரீதியாகவும் செயல்படுத்தக்கூடியதல்ல. பேப்பரைப் பொறுத்த வரையில், சுத்தமானதாக இருந்தால், மறு உபயோகத்திற்கு உதவும்; அழுக்கேறி இருந்தால், வேறு உபயோகத்திற்குப் பயன் படுத்தாமல், எரிக்கத்தான் வேண்டும்; மறு சுழற்சி செய்ய முடியாத மற்றப் பொருட்களும் உள்ளன.
இது தவிர, இடைத்தரகர்களின் கூறுக்கீடுகளினாலும், இங்கேயே மறுசுழற்சி செய்ய இயலாததாலும், கழிவுப்பொருட்களை திண்டுக்கல், தேனி, கம்பம், பழனி முதலிய வெளியூர்களுக்கு மறுசுழற்சிக்காக எடுத்துச் செல்ல வேண்டி யிருப்பதால் செலவு அதிகரிக்கிறது. பொருளாதார ரீதியாக இதைத் தவிர்க்க வேண்டுமானால், இப்போதையவிட அதிக அளவில் பேப்பரும், பிளாஸ்டிக்கும் சேகரிக்க வேண்டும். இவை பள்ளிகளிலிருந்து கிடைப்பதைவிட, பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலிருந்தே அதிக அளவு கிடைக்கும்.
எதிர்பார்க்கும் அளவு பள்ளிகளிலிருந்து கிடைப்பதற்கு, மாணவர்களுக்கு ஆர்வமூட்டி இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயலலாம். கோடைக்கானலில் டாக்டர் ராஜமாணிக்கம் இருபத்துமூன்று பள்ளிக்கூடங்களில், அம்மாணவர்களை ஈடுபடுத்தியிருக்கிறார் – சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் கூட்டமைப்புகள் ஆரம்பித்து, மாணவர்கள் மூலம், அவர்களது பெற்றோர், அக்கம்பக்கத்தில் வசிப்போர் எனப்பொதுமக்களையும் ஒன்றுசேர்த்து, குப்பையை தரம்பிரித்துக் கையாளச், செய்ய முயன்று வருகிறார்.
குப்பையைத் தரம் பிரித்துக் கையாள தனித்தனி குப்பைத்தொட்டிகள் ஊரின் பல இடங்களில் வைப்பதென்பது இங்கொன்றும் புதிதல்ல என்பது பல ஆண்டுகளாக இங்கு வசிப்போர் சொல்வது. பொதுமக்கள் பலர் சேர்ந்து வாங்கிக்கொடுத்த தொட்டிகள் திருட்டுப்போய்விட்டன. ஒருமக்கள்முயற்சிவீணானதுதான்மிச்சம்.
இப்போது, கோடைக்கானல் சர்வதேசப்பள்ளியானது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் மறு சுழற்சி செய்யக்கூடிய பேப்பர், பிளாஸ்டிக், மற்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் , அவ்விதம் செய்யமுடியாத பொருட்கள் என நான்கு தனித்தனியான குப்பைகளிடும் தொட்டிகள் கொடுத்திருக்கிறார்கள். மற்றுமொரு உத்தியையும் அவர்கள் அறிமுகப்படுத்துவதாக இருக்கிறார்கள் – பள்ளித் தாழ்வாரங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட மரத்தாலான நான்கு ஒருங்கிணைந்த தொட்டிகளில் அவற்றின் உள்ளடக்கியதாக உலோகத்தொட்டிகளை வைத்து விட்டால், மாணவர்களே அந்தந்தக்குப்பையை அதற்குரிய தொட்டிகளில் சேர்த்துவிட முடியும், இது ஒரு நீண்டகாலத்தீர்வாகவும் இருக்கும் – இத்தகைய தொட்டிகளைத் தயாரிக்க, தற்சமயம் ஒவ்வொன்றுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆவதால், இத்திட்டம், பெரிய நிறுவனங்கள் நிதியுதவி செய்தால்தான் சாத்தியப்படும்.
சமீபத்தில், டாக்டர் ராஜமாணிக்கம் மேற்கொண்ட ஆய்வொன்றில், நகராட்சி குப்பை சேகரிக்க எனத் தனியிடங்கள் ஏற்படுத்தினால், கோடைக்கானல் வாசிகளில் இருபத்தியேழு சதவிகித்தினர், தமது குப்பைகளை அதில் சேர்த்துவிடத் தயாராக உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதற்கு, எரிபொருள் செலவு மட்டுமின்றி மனித சக்தியும் தேவைப்படுகிறதால், இது நிரந்தர தீர்வாகாது.
கோடைக்கானலிலுள்ள எல்லா உணவகங்களும் ஒன்றுசேர்ந்து ஒரு நிலம் வாங்கி உரம் தயாரிக்கும் கிடங்கொன்று ஏற்படுத்தினால், அதில் மக்கும் குப்பைகளைச் சேகரித்துத் தரமான இயற்கை உரம் தயாரிக்க முடியும். இதன் மூலம் தெருக்களிலும் மற்ற இடங்களிலும் சேரும்குப்பைகளைக் கிட்டத்தட்டஎண்பது சதவிகிதம் தவிர்க்க முடியம் என்பது டாக்டர் ராஜமாணிக்கத்தின் கூற்று. உண்மையில் பலருக்கும், முக்கியமாக இளம் தொழில்முனைவோர்க்கு இது ஒரு புது தொழில் வாய்ப்பாக அமையும், உணவகங்களிலிருந்து உணவுக்கழிவுகளைச் சேகரித்து, இயற்கை உரம் தயாரித்து, அதை அதே ஹோட்டல்களுடைய தோட்டங்களுக்கோ, அல்லது பழனி மலைப்பகுதியிலுள்ள மற்ற விவசாயிகளுக்கோ விற்பனை செய்து பொருளீட்டலாம். கோடைக்கானலிலுள்ள பழமையான ஹோட்டல்களில் ஒன்றான ஹாலிடே ஹோம் (HOLIDAY HOME) எனும் உல்லாச விடுமுறை மையத்தின் மானேஜிங் பார்ட்னரான ப்ரியாங்க் ப்ரதீப், டாக்டர் ராஜமாணிக்கத்தின் முயற்சிகளால் கவரப்பட்டு, இங்குள்ள உணவக உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, கழிவு மேலாண்மைக்கான ஓர் பட்டறை நடத்தி இருக்கிறார். இந்த இடம் கழிவிலிருந்து உரம் தயாரிப்பதில் நல்லதொரு உதாரணமாகத்திகழ்வது மட்டுமின்றி, ஒரு பசுமையான உல்லாச விடுமுறை மையமாக திகழ்கிறது
முன்னேற்றமென்பது மெதுவாகத்தான் வருமென்றாலும் அதற்கான நல்ல அறிகுறிகள் காணப்படுகின்றன.
சென்ற மாதம், அரியலூரிலுள்ள டால்மியா சிமென்ட் தொழிற்சாலைக்கு அவர்கள் எரிபொருளாக உபயோகிக்க, நூற்றிப்பத்து டன் எடையுள்ள மறுசுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் கழிவுகளை நம்மூரிலுள்ள பிரகாசபுரம் குப்பைக்கிடங்கிலிருந்து நகராட்சி அனுப்பியிருப்பதாக சானிடரி இன்ஸ்பெக்டராகப் பணிபுரியும் திரு வி.சுப்பையா கூறுகிறார். இது மட்டுமின்றி, நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் தாங்களே,
குப்பைகளைத்தரம் பிரித்து, நகராட்சியுடன் ஒப்பந்தம் வைத்துள்ள, சில வியாபாரிகளிடம் விற்க ஊக்குவிக்கப்படுகிறர்கள். பொது ஜனங்களுக்குத் தத்தமது வீட்டுத்தோட்டங்களிலேயே மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதற்குப் பயிற்சி அளிப்பதற்காக என்றே சிலரை நகராட்சி நியமித்திருக்கிறது.
தற்சமயம் இதில் தேவைப்படுவது மக்களிடம்எழுச்சியும், அதை நடைமுறைப்படுத்த வேகமும்தான். “நகர மக்கள் தமது நகரத்தின் மேம்பாட்டில் பெருமிதம் கொள்ளவேண்டும். எது எப்படிப்போனாலென்ன என்கிற அலட்சியப் போக்கும் மெத்தனமும் இருக்கக்கூடாது. நமது கடமையைச் சரியாகச் செய்வதில் ஊக்கமிருக்க வேண்டும்” என்கிறார், கோடைக்கானலில் பல வருடங்களாக வசிக்கும் லதிகா ஜார்ஜ்..