ஒரு கண்ணோட்டம்:
மகாத்மா காந்தியின் லட்சியங்களை மறுபடி நமது நாட்டில் பரப்பும்பொருட்டு, கோடைக்கானல் ஃபெல்லொஷிப் லைப்ரரியும், காந்தி அமைதி ஃபௌண்டேஷனும், தி ஔட் அஃப் ப்ரின்ட் ஜர்னலும், இணைந்து, காந்தி பிறந்த 150வது வருடமான 2019ல், அக்டோபர் மாதம், ராதா குமார் அவர்களை நன்கொடையாளராகக் கொண்டு, ஒரு கட்டுரைப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது. சென்ற வருடம் கோடைக்கானல் சர்வதேச பள்ளியின்(KIS), இஷிதா பாண்டே முதல் பரிசு பெற்றார்; செயிண்ட் தாமஸ் பள்ளியின், மன்சூர் அலி ஜுரபி, செயிண்ட் ஜேவியர் பள்ளியின் B.அர்ச்சனா இருவரும் இரண்டாம் பரிசை பகிர்ந்துகொண்டனர்.
இப்பரிசானது, மகாத்மா காந்தியை பற்றிய சிறந்த கட்டுரைகளுக்கானதாகும். அவர் தனது வாழ்க்கையின் மூலம் கடைப்பிடித்த லட்சியங்களான மனிதனேயம், ஜநநாயகக் கோட்பாடுகள், அகிம்சை, பிறரிடம் உண்மையே பேசுதல், கருணை, ஆகியவற்றை நமது இளைஞர்களிடையே பரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
கோடைகானல் காந்தி பரிசு 2021 :
படைப்புக்களை அனுப்பவேண்டிய கடைசி தேதி: 30.08.2021.
சிறந்த மூன்று படைப்புக்களுக்கு முறையே ரூ.15,000/-, ரூ10,000/- ரூ.5,000/ வழங்கப்படும்.
பரிசு பெறும் படைப்புகள் “தி ஔட் அஃப் ப்ரின்ட்” ஜர்ன”லிலும், தி கோடை கிரோனிகிள் டிரஸ்ட் நடத்தும் “தி கோடை கிரானிகிள்” என்கிற, மலையிலிருந்து வரும் மாதாந்திர பதிப்பின் அக்டோபர் மாத வெளியீட்டிலும் வெளியிடப்படும்.
போட்டிக்கு அனுப்புவதறக்கான படைப்புக்களின் அம்சம்:
எழுத்து மூலமாகவோ மல்டிமீடியா(பல்லூடகம்) மூலமாகவோ; தமிழிலோ ஆங்கிலத்திலோ படைப்புக்கள் இருக்கலாம். அகில இந்திய அளவில், 16 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்கள், இதில் பங்கேற்றுக் கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். வயதில் குறைந்தோரும் படைப்புக்கள் அனுப்பலாம், ஆனால் அவர்களுக்குத்தனிப் பிரிவு கிடையாது.
காந்தி பரிசுக்கான போட்டிக்குப் பதிந்து கொள்வது எப்படி:
கீழுள்ள விதி முறைகளைக் கவனமாகப்படித்தறிந்து, படைப்பின் தலைப்பைத் தேர்ந்தெடுத்து, tinyurl.com/gandhiprize என்கிற இணயதளத்திற்க்குச் சென்று பதிவு செய்யும் படிவத்தைத் தரவிறக்கம் செய்யவும்.
விதி முறைகள்:
1. போட்டியாளர்கள், மகாத்மா காந்தியின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் நன்கு அறிந்திருக்கவேண்டும். போட்டியில் இணைந்த பின்னர், போட்டியாளர்களுக்கு அவரது பிரபலமான படைப்புக்களிலிருந்து தேர்ந்தெடுத்த தொகுப்புக்கள் சில அனுப்பி வைக்கப்படும்.
2. படைப்பு மொழி: ஆங்கிலம் அல்லது தமிழ்.
3. எழுத்து மூலம் அனுப்புவது சிறுகதை, கட்டுரை அல்லது கவிதையாக இருக்கலாம். (கவிதை தவிர மற்றவை 2500 – 3000 வார்த்தைகளில் இருத்தல் வேண்டும்).
4. மல்டிமீடியா வானால் – 2 ½ லிருந்து 3 நிமிடம் வரை இருக்கலாம்.
5. கருத்துக்களின் மூலம் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
6. கருத்துத்திருட்டு தெரிந்தால் உடனடியாகப் போட்டியிலிருந்து நீக்கப்படுவர்.
7. காந்தியின் வாழ்க்கையைப் படம்பிடித்ததுபோல் எழுத வேண்டாம்! –- உங்களது பார்வைக்கோணத்திலிருந்து உருவாக்க வேண்டும்.
தெரிந்தெடுக்க வேண்டிய தலைப்புக்கள்:
1. அகிம்சாமுறையில் எதிர்ப்பைத்தெரிவிப்பது காந்தியைப் பொறுத்தவரை ஒரு நல்வகைப்போராட்டமாக இருந்தது. ஆனால் தற்காலத்திய வன்முறைச்சூழலில் அது சாத்தியப்படுமா? – உங்கள் கருத்துக்களை உதாரணங்களுடன் விளக்கவும்.
2. காந்தி தன்னை, “நடைமுறையில் ஒரு லட்சியவாதியாக உருவகப்படுத்திக்கொண்டார்”. இந்த அடைமொழி உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? உங்களுக்குத்தெரிந்த வேறு யாரை நீங்கள் “நடைமுறையில் ஒரு லட்சியவாதி” என போற்றுவீர்கள்?
3. “நமது தேசத்தின் மேம்பாடு நமது விவசாயிகளின் மூலம் தான் கிடைக்கும்” என்ற அவரது கூற்று தற்போது உண்மையாக உள்ளதா? நீங்கள் இந்த கருத்து உண்மை என்றாலும் / உண்மை அல்ல என்றாலும், ஏன் என்று கூறவும்?
4. “அதைரியமும் அலட்சியப்போக்கும் வன்முறையைவிடக்கொடிது” எனக் கருதினார் காந்தி. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? ஆம் / அல்ல என்றால் – ஏன், எதற்காக என்று விளக்கவும் ?
5. எங்கும் எதிலும் உண்மையாகவே இருக்கவேண்டும் என்ற காந்தியின் கொள்கையே நமது நாட்டின் இலக்கு “சத்யமேவ ஜயதே” எனும் வேதப்பொருளை எடுத்தாளச்செய்தது. “வாய்மையே வெல்லும்” எனும் இவ்வாக்கியம், எங்கும் பொய்யான வதந்திகளைப்பரப்பிவரும் தற்காலத்திய சூழலில் எப்படிப்பொருந்தும்? மக்களிடையே இந்நிலையைச் சரிப்படுத்த நீங்கள் என்ன செய்வீர்கள்?
சந்தேகங்களுக்கு ஈமெயில் மூலம் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: gandhiprize@thekodaichronicle.com