கோவிட் 19 தொற்று இருக்கிறது என்று எப்படித்தெரியும் – அடுத்து என்ன செய்வது ?

நம் எல்லோருக்கும் இது ஒரு சோதனைக்காலம்தான்; ஆனால் இடர்ப்பாடுகள் வரும்போது கலங்காமல்,உள்ளூர் வரைமுறைகளையும், என்னென்ன செய்யவேண்டியவை / வேண்டாதவை, என்பது பற்றிய விதிமுறைகளையும், ஆக்சிஜன் / வென்டிலேட்டர் பற்றிய தகவல்களையும், தொற்று ஏற்பட்டால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது பற்றியும் இக்கட்டுரை தெளிவாக்குகிறது.

கோவிட் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு என்று கருதுவது எப்போது

 

  • அதிக அளவில் நோயாளிகள் உள்ள இடங்களுக்குச் சமீபத்தில் போயிருந்தால் { முக்கியமாக மலையிலிருந்து கீழிறங்கி } – மஹாராஷ்ட்ரா, கர்னாடகா, கேரளா, உத்தரப்பிரதேசம் டெல்லி, குஜராத்,தமிழகம், முதலியவற்றில் இந்த இரண்டாவது அலையில் தொற்று மிக அதிகம்.

 

  •  இத்தகைய இடங்களிலிருந்து வந்திருந்தவர் குழுமியிருந்த இடங்களுக்கு – { இறந்தவர் வீட்டிற்கோ, அல்லது கல்யாணம் முதலிய விசேஷங்களுக்கோ, மக்கள் கூடியிருந்த இடங்களுக்கோ} போயிருந்தீர்களானால் ;

 

  •   பல பயணிகளோடு { ஆகாய விமானம், பஸ்,ரயில்,முதலியவற்றில்} வெளிக்காற்றோட்டமில்லாத வாகனங்களில் பயணம் செய்திருந்தால்;

 

  •  தலைவலி, தொண்டை எரிச்சல் / வலி, உடல் சோர்வு / வலி, மூக்கில்னீர் வடிதல், வயிற்றுப்போக்கு,மூச்சுவிடசிரமம், நாவில்ருசியின்மை, வாசனை நுகர முடியாமை இவைதான் முக்கியமான குறியீடுகள்; இன்னும் சில உள்ளன, ஆனால் இவைதான் பிரதானமானவை.

 

  •    கோடைக்கானலை விட்டு வெளியே சென்று வந்திருந்தால்,ஒரு வாரத்திற்காவது தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது பொறுப்பான செயல். திரும்பிய பின் 5-6 நாட்கள் கழித்து ஒரு ஸ்வாப் டெஸ்ட் {swab test} செய்து கொள்வது அவசியம் .இன்குபேஷன் காலம் 3- 14 நாட்கள் ஆனாலும் {உச்ச கட்டம் 5-7 நாட்கள்}, சிலருக்குத் தொற்றின் அறிகுறிகள் இருக்காது.

எனக்கு கோவிட்19 ன் அறிகுறிகள் உள்ளனஅடுத்துச் செய்ய வேண்டியது என்ன ?

உடனே டாக்டரிடம் சென்று SARS CoV2 க்குப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்கோடைக்கானலில் இந்த  ஸ்வாப் டெஸ்ட் செய்ய இரண்டு இடங்கள் உள்ளன:

அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார நிலயம்

4வது தெரு, ஆனந்தகிரி:

காலை 8 மணி முதல் மாலை 6 வரை {ஸ்வாப் டெஸ்ட் 1 மணிவரை மட்டுமே}.  

இங்கு கட்டணம் கிடையாது.  

போன்: 04542 243253.

வான் ஆலன் ஆஸ்பத்திரி

புனித மேரி ரோடு

இங்கு 24 மணி நேரமும் உண்டு { ஸ்வாப் டெஸ்ட் 1 மணி வரை மட்டுமே}

கட்டணம்: ரூ 2,500 

போன்: 04542 241273 / 241254

அவரவர் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் இரு இடங்களிலும் 1 மணி வரை டெஸ்ட்கள் ஏற்கப்படுகின்றன; இரு இடங்களிலும் முன் பதிவின்றிச் சென்று பரிசோதனை செய்துகொள்ள முடியும்.}  வீட்டிலேயே பரிசோதனை செய்து கொள்ள : மதுரையிலுள்ளஅகம் டையக்னாஸ்டிக்ஸ்க்கு { AGAM DIAGNOSTICS } ஒரு நாள் முன்னதாகக் கேட்க வேண்டும் { போன் : 08940894079 } – சாதாரணமாக அவர்கள் நான்கைந்து பேரை டெஸ்ட் செய்வதற்கு ஒரு டெக்னீஷியனை அனுப்புவது வழக்கம்.

டெஸ்ட் ரிசல்ட் வரும் வரை பொறுத்திருக்கவும்; தொற்று இல்லை என்றால் உங்கள் வேலைகளை சாதரணமாகப் பார்க்கத் துவங்கலாம்ஆனாலும் கவனமாக, சுகாதார விதிமுறைகளைக்கடைப்பிடித்து வர வேண்டியது மிக மிக அவசியம்.

பரிசோதனை பாசிடிவ் ஆனால் என்ன செய்வது ?

இரத்தத்தில் 92% ற்கும் குறைவாக பிராண வாயு உள்ளோரையே ஆஸ்பத்திரியில் சேரக்கோருமாறு தமிழ் நாடு அரசாங்கம் மே 13 வரை கொடுத்த அறிவுரைகளில் கூறியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட விதிமுறைகள் எல்லா SARS COVID +ve நோயாளிகளையும் தத்தமது இல்லங்களிலேயே 10 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் { முடியாத பட்சம், அரசாங்கம் உரிமைப்படுத்திய தனிமை இடங்களில் தங்குமாறும்} கூறுகிறது.

பி.டி.சாலையிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியின் கோவிட் வார்டில் {போன்: 04542 241292} ஆக்சிஜன் வசதியுடன் 34 படுக்கைகளும் , வென்டிலேடர் வசதியுடன் 4 படுக்கைகளும் உள்ளன.

வான் ஆலன் ஆஸ்பத்திரியில் 2 கோவிட் வார்டுகள் { 8 சாதாரணம், 7 பிரைவேட்} தனித்தனியே ஆக்சிஜன் சப்ளை, மூக்கில் பொருத்தும்படியான நவீன ஆக்சிஜன் சப்ளை, ஆக்சிஜன் ஜெனெரேடர் முதலியவை உள்ளன.

மதுரை தேவதாஸ் ஆஸ்பத்திரி , அவர்களுடைய கிளையான KHMS ஆஸ்பத்திரியில், ஒரு கோவிட் வார்டு அமைக்க முயன்று வருகின்றனர்.

கோடைக்கானலில் தனிமைப்படுத்தப்பட்ட {குவாரன்டைன்} சென்டர்கள் இரண்டு உள்ளன: அரசாங்கத்தினுடையது, ஸ்ரீனிவாச புரத்திலுள்ள அன்னை தெரெசா பல்கலைக்கழகத்தின் ஹாஸ்டல்களில் உள்ளது: அப்பர் லேக் ரோட்டிலிருக்கும் ஸ்வீடிஷ் காம்பௌண்டிலுள்ள ஸ்வீடிஷ் ஹவுசில், வான் ஆலன் ஆஸ்பத்திரியுடன் அவர்கள் இணைந்து நடத்தும் குவாரன்டைன் சென்டர் ஒன்று இருக்கிறதுஇதில் வான் ஆலன் மூலமாகத்தான் சேர முடியும்.

கோடைக்கானலில் வேறு எங்கும் கோவிட் நோயாளிகளூக்கு அங்கீகரிக்கப்பட்ட குவாரன்டைன் வசதி இல்லை.

பாசிடிவ் ஆனால் : உங்களுடைய குறியீடுகளின் தீவிரத்தைப்பொறுத்து, உங்கள் மருத்துவர் கூறும் ஆலோசனையின்படி நடந்து கொள்ள வேண்டும்வீட்டிலேயே தனிமைப்படுத்தினால் போதுமா, வேறு அங்கீகரிக்கப்பட்ட தனிமையில் இருக்க வேண்டுமா, மருத்துவ மனையில் சேர வேண்டுமா, என்பது நோயின் தாக்கத்தைபொறுத்திருக்கிறது. நீங்கள் விரும்பும் மருத்துவ மனைக்கு { ஜி.எச், அல்லது வான் ஆலன்} உடனே போய்ச் சேர்ந்து விடுங்கள்ஒரு வாரம் அல்லது பத்து நாட்களாவது இருக்க வேண்டி வரும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். மேலும், மருத்துவ மனையிலோ, தனிமைப்படுத்தப்பட்டாலோ, அங்கிருக்கும்வரை உங்களைப் பார்க்க வருவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்பதும் நினைவில் இருக்கவேண்டும்.

இரு மருத்துவ மனைகளிலும் வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி உண்டு {மறு உபயோகப்படுத்த முடியாத – DISPOSABLE CONTAINER –பாத்திரங்ககளில் கொண்டுசென்று அங்குள்ள பணியாளரிடம் கொடுத்தால் அவர்கள் உங்களிடம் சேர்ப்பிப்பார்கள்; வான் ஆலனில்,அவ்வப்போது உணவு தயாரித்துக்கொடுக்கும் வசதியும் சிறிதளவு உள்ளது.

இந்தப்பத்து நாட்காலத்தில் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமலிருக்க யாரிடமும் பழகாமலிருக்க வேண்டும்.

இதற்கு முந்தைய வாரம் யார்யாரிடமெல்லாம் தொடர்பு கொண்டிருந்தீர்களோ, அவர்களுக்கெல்லாம் உங்களுக்கு தொற்று இருப்பதைத் தெரிவித்து விடுங்கள்அவர்கள் எல்லோரும் ஸ்வாப் டெஸ்ட் செய்து தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது முக்கியம்முந்தைய வாரம் யார் யாரிடம் எல்லாம் மாஸ்க் அணிந்தோ அணியாமலோ நீங்கள் பழகியிருந்தீர்களோ அவர்களெல்லாம் தொற்றிற்கு பரிசோதனை செய்து கொள்வது மிக அவசியம். உங்கள் வீட்டிலுள்ளோர் அனைவரும் பத்து நாட்கள் தனிமைப்படுத்துதல் மட்டுமின்றி டெஸ்டும் செய்துகொள்வதும் தேவை; அல்லது கோவிட் தனி அதிகாரி டாக்டர் மதன் விக்னேஷ் { COVID NODAL OFFICER FOR KODAIKANAL – DR. MADAN VIGNESH} – அரசாங்க மருத்துவ மனை மூலமாக செயல் படுபவர்கூறும் கால அவகாசம் வரை தனிமைப்படுத்துதலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

முனிசிபாலிடியின் சுகாதாரப் பணியாளர்கள் உங்கள் டெஸ்ட் அறிவிப்பு வந்த 24 மணிக்குள் உங்கள் வீட்டிற்கு வந்து உங்கள் இருப்பிடத்தை முழுவதுமாக சுத்தப்படுத்திவிட்டுப்போவார்கள்.

கோடைக்கானலில் கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்  யாவரும் தனி அதிகாரியின் { டாக்டர் மதன் விக்னேஷின்} நேரடிக் கண்காணிப்பில் இருப்பார்கள்.;வேறு மருத்துவ மனைக்கு அனுப்ப வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்  அதிகாரியும் அவரே.

  • Translated by Kamakshi Narayanan, Tamil translator at The Kodai Chronicle

Dr. Malini Devanandan

Dr Malini Devanandan completed her undergraduate training at CMC, Vellore, and her post-graduate training in family medicine at the Christian Fellowship Hospital, Oddanchatram. She currently works at Kodaikanal International School.

Leave a Reply

Your email address will not be published.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Previous Story

Remembering Dr Kirloskar

Next Story

அந்தரத்தில் ஊசலாடும் கல்வி