காலை 7 மணி – அனைவரும் எழுந்துவிட்டார்கள். எங்கள் இளைய மகள் ரேஷம், வெளியில் உள்ள புல் வெளியிலிருக்கிறாள்; கீழுள்ள தோட்டத்தில், மிகவும் பழகிய ஓர் உருவம் காண்கிறது ..”ட்ராக்” – [“TROG- ட்ராக்ளோடைட் TROGLoDYTE] என எங்களால் செல்லப் பெயரிடப்பட்ட ஓர் காட்டுமாடு; – பலவருடங்களாக சுற்று வட்டாரங்களிலும், சமீப காலமாக, எங்கள் வீட்டுத்தோட்டத்திற்கும் அடிக்கடி வந்து கொண்டிருந்த பெரிய ஒற்றைக் காட்டு மாடு [ கௌர் ]..
ரேஷம் தன் தந்தையை எச்சரிக்க, அவர் எங்கள் நாய் ஜாங்கோவைப் பிடிக்க ஓடுகிறார். சில நொடிகளில், அந்த மாடு சுற்றித் திரும்பி எங்கள் முன் கதவை அடைகிறது. ரேஷம் பின் வராண்டாவிற்குள் தஞ்சமடைய நுழைகிறாள். அந்த ஒற்றை மாடு, வெளியில் இருந்த மேசையை நேர்த்தியாக தவிர்த்து, பெட்டுனியாவும் ஃப்ளாக்சும் இருந்த பெரிய பூந்தொட்டிகளை அழகாகத் தாண்டி அருகிலிருந்த ஓரிரு பெரிய கற்களை தூக்கி எறிந்து ஒரு குறுகிய இடத்திற்குள் நுழைந்து தோட்டத்தின் கடைக்கோடிக்குப் போகையில் கதவு அடைக்கும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு அங்கு அருகிலுள்ள ஜன்னலுக்குப் போயிற்று. எங்கள் மகள் ரூபாவும் அவளுடைய மகனும் அறைக்குள் அதனிடமிருந்து சில அடி தூரத்தில் இருந்தனர். கண்ணாடி மட்டுமே இடையில்; ஆனால், அந்த விலங்கு கண்ணாடியில் தனது பிம்பத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் உணர்ந்தோம்., பின்னர் திரும்பி வேலியை தாண்டிக் குதித்து, அதிகாலையின் மூடுபனிக்குள் மறைந்துவிட்டது.
கோடைக்கானலைச் சுற்றியுள்ள காடுகளிலிருந்து, [BOS GAURUS- INDIAN GAUR], காட்டு மாடு, [SUS SCROFA- WILD BOAR] காட்டுப்பன்றி, [ ERETHIZONDORSATUM – PORCUPINE] முள்ளம்பன்றி மற்றும் பிற காட்டு இனங்கள் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி முழுவதும் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. அவை முதுமலை, ஊட்டி, குன்னூர், கோடைக்கானல் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன

காட்டுமாட்டுடன் மிக அருகாமையில் வாழும் தருணம் : கோடைக்கானல் நகரத்தில், பகல் நேரத்தில் காட்டு மாடைத் தாண்டிச் செல்வதோ வாகனம் ஓட்டிச் செல்வதோ இங்குள்ளோருக்கு வழக்கமான ஒன்று. (புகைப்படம்: ஆர் செரபாண்டி)
காடுகளில் வாழும் இந்த உயிரினங்கள் – குறிப்பாக, இந்த கம்பீரமான கௌர் – மனிதர்கள் வாழும் இடங்களுக்கு ஏன் இடம் பெயர்ந்தன?
இரவு நேரத்தில் அதிகம் உலவும் காட்டுமாடுகளை அதன் இயல்பான வாழ்விடத்தில் நெருங்குவது கடினம். ஆனால் நகர்ப்புறத்தில் வாழப்பழகிவிட்ட இம்மாடுகளுக்கு இந்த வழிமுறைகள் மாறிவிட்டன. இப்போதெல்லாம் காட்டுமாடுகள் கூட்டமாக வாரச்சந்தையில் அலைந்து திரிவதைக் காணலாம்; ஒரு முறை கோடைக்கானல் பேருந்து நிலையத்திற்குள்ளேயே ஒரு பெண் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு முறை, 2019-ல் நடந்தசம்பவத்தில், வில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர் அவரது தோட்டத்தில் குத்திக் கொல்லப்பட்டார் – இது அரிதானது – காட்டுமாடுகள், தமக்கோ அல்லது தமது கன்றுகளுக்கோ ஏதாவது அச்சுறுத்தலை உணரும்போது மட்டுமே தாக்கும்

பூம்பாறை செல்லும் வழியில் இரு காட்டுமாடுகள் கொம்புகளைப் பின்னி ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும் காட்சி (புகைப்படம்: ஆர் செரபாண்டி)
கொடைக்கானல் பலவித வனவிலங்குகளின் வாழ்விடமான சோலைக் காடுகளினூடே உள்ளது – மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய வெப்பமண்டல மலைப்பகுதிக் காடுகள், புல்வெளிகள் அடங்கியவை. இக்காடுகளுக்கும் இங்கு வசிக்கும் உயிரினங்களுக்கும் ஒருங்கிணைந்த உறவொன்று ஏற்பட்டுள்ளது ஆங்கிலேயர்களால் வணிக வனவியல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கத்திச்சவுக்கு, யுகலிப்டஸ் போன்ற மர இனங்களை அதிகமாக நட்டதால், அவை எங்கும் ஊடுருவி கௌரின் உணவு ஆதாரமாக இருந்த பரந்த புல்வெளிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தன. வனவிலங்குகளுக்கு இருந்த கடுமையான பாதுகாப்பு காரணமாக மாடுகளை வேட்டையாடுதல் குறைந்ததோடு, அவற்றின் இயற்கை எதிரிகளான புலிகளும் மிகவும் குறைந்துவிட்டதால் காட்டுமாடுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. இதுதான், காட்டுமாடுகள் நகரங்களுக்குள் இடம்பெயர்வதற்கு காரணமாகப் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், இது மட்டுமே காரணமாகத் தோன்றவில்லை. பலர் கூறும்படி, அதிக அளவில் அவை உணவு, தண்ணீரைத் தேடுகின்றன என்றால், நகர்ப்புற இடங்களில், சிறிய பண்ணைகள், வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படாத ஆனால் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ள நிலங்கள் சிறிதளவே உள்ளன – அவற்றிற்குப் போதுமான அளவில் இல்லை
கௌர் கூட்டங்கள் சந்தையில் அலைந்து திரிவதைக் காணலாம், ஒரு முறை கோடை பேருந்து நிலையத்தில் கூட ஒரு பெண் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு முறை, 2019-ல் நடந்த சம்பவத்தில், வில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவர் அவரது தோட்டத்தில் காட்டு மாடால் குத்திக் கொல்லப்பட்டார்.
தமிழ்நாடுவனத்துறையில் வனவிலங்குகளுக்கான மாநிலவாரிய உறுப்பினரும், விலங்குகள் மீதான வன்கொடுமையை தடுக்கும் சங்கத்தின் (SPCA) கோடைக்கானல் நிர்வாக அறங்காவலருமான ஜனனி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுகையில், “ இம்மாடுகள், நகர் பகுதிக்கு ஏதோ சில காரணங்களால் ஈர்க்கப்பட்டிருப்பது நன்கு வெளிப்படையாகிறது. சுற்றுலா அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளால் வீசப்படும் குப்பைகள், ஹோட்டல்களில் இருந்து வரும் அதிகமான உணவுக்கழிவுகள், மாடுகளை எளிதாகக் கவர்ந்து மனிதர்களைப்போல் மாடுகளும் அவற்றிற்கு அடிமையாகிவிட்டதாகத் தோன்றுகிறது- மற்ற வனவிலங்குகள் போல் காட்டுமாடும் உப்பு உண்ண விரும்பும். வனவியல் வாரியம், உலோகத்தட்டுகளில் உப்பு வைத்தார்கள்; இவை காடுகளில் தங்குவதை ஊக்குவிப்பதற்காக தடுப்பணைகளைக் கட்டினர்; ஆனால் மனிதக் குடியிருப்புகளில் கிடைக்கும் “ குப்பைஉணவு'[ FAST FOOD] கௌரையும் மனிதர்களைப் போலவே அதற்கு அடிமையாக்கி உடலுக்கும் கேடு விளைவிக்கிறது என ஜனனி கூறுகிறார். இளைய தலைமுறைக் காட்டுமாடு கன்றுகள், புல்வெளி வாழ்க்கையை அனுபவித்ததேயில்லை என அவர் மேலும் கூறுகிறார்.
காட்டு மாடு உப்பை எதிர்பார்த்து சமையலறை வாசல் வரை வருகிறது – உள்ளூர்வாசிகள் உணவில் உப்புக்காக வரும் காட்டு மாட்டுக்கு, உப்பு வைக்கின்றனர் – (வீடியோ: ஜார்ஜ் பென்னர்)
15 வருடங்களுக்கு முன்பு வரையும் கூட, நகரத்தின் மையப்பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோடைக்கானல் கால்ஃப் கிளப்புக்குப் போகும்போது ஒன்றிரண்டு காட்டு மாடுகளையாவது பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் போவதுண்டு. ஒருமுறை, நாங்கள் ஒரு அற்புதமான காட்சியைக் கண்டோம்: சாலையின் குறுக்கே ஒரு சிறிய கௌர் மந்தை சாலையைக் கடந்துசெல்கிறது – கிளப்பின் உயரமானவேலியை – [அங்கு கிட்டத்தட்ட ஆறு அடி உயரமுள்ளது ] மிக எளிதாக செங்குத்தாகத் தாவிக் குதித்தன. எங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளின் ஒளிரும் வெளிச்சத்தில், அவைகளின் தசைகள் சிற்றலையாக ஒளிர்ந்து பரவ, அவைகளின் பின்னங்கால்கள் உடலை மேல்நோக்கித் தள்ளிக் குதிப்பது ஓர் அழகிய காட்சி – நாங்கள் சரியாக ஆறு மாடுகள் எண்ணினோம். வெள்ளைக்காலுறை அணிந்தது போல் தோன்றும் மெலிந்த கால்கள், அவற்றின் பருமனான உடல்களை உந்தி எகிறும் நுட்பம், ஒன்றோடொன்று முரண்பட்டாலும் அவற்றின் லாவகம் காடுகளில் துள்ளிக் குதித்தோடும் மறிமானையும் புள்ளிமானையும் நினைவூட்டின..
‘காட்டுமாடுகள் நகர்ப் பகுதியில் ஏதோ சிலவற்றால் ஈர்க்கப்பட்டிருக்கிறதென்பது வெளிப்படை.. சுற்றுலா அதிகரித்துள்ளதால், வரும் பயணிகளால்அலட்சியமாக வீசப்படும் குப்பைகளும் ஹோட்டல்களில் இருந்து வரும் அதிகமான உணவுக் கழிவுகளும், மாடுகளைக் கவர்ந்து, மனிதர்களைப்போல்காட்டுமாடுகளும் இவற்றிற்கு அடிமையாகிவிட்டதாகத் தோன்றுகிறது – கௌர் உப்புச்சுவையை விரும்புகிறது.’
– ஜனனி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு வனத்துறையில் வனவிலங்குகளுக்கான மாநில வாரிய உறுப்பினர் ; கொடைக்கானலில் விலங்குகள் மீது வன்கொடுமையை தடுக்கும் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர்(SPCA)
கால்ஃப் கிளப்பில் உள்ள புல்வெளிகள் பசுமையான சோலைக்காடுகளால் சூழப்பட்டுள்ளன, சோலைகள்,கிளப்பின் அருகிலிருந்து ஆரம்பித்து பேரிஜம் ஏரியைத்தாண்டியும் பரந்துள்ளன ,இந்தப்பசுமையான பகுதியில் சுற்றித்திரியும் மந்தைகள் அதிர்ஷ்டம்செய்தவை – – சோலைமரங்களின் அடர்த்தி, பசுமையான புல்வெளியினூடே ஓடும் சிற்றோடைகள் இவற்றால் நிச்சியமாக உணவும் தண்ணீரும் கிடைத்துவிடும்; நகரத்திற்குள் உள்ள மாடுகள் உணவுக்காக அலைந்து திரிவது போல் இல்லாமல், வெகு தூரத்தில் மட்டுமே மனிதர்கள் சிறு பந்துகளை காற்றில் வீசும் இவ்விடத்தில் , இந்த மந்தைகள் உரிமையோடு வாழ்கின்றன.. நான் ஒருவேளை நகர்ப்புறத்தில் வசிக்கும் காட்டு மாடாக இருந்தால், இங்குதான் வாழ விரும்புவேன் !

புகைப்படம்:செரபாண்டி
கொடைக்கானலின் கால்ஃப் மைதானத்தை சுற்றி வாழும் பெரியமந்தைகள்,பெரும்பாலும் மனிதர்கள் அங்கு இருப்பதையே கவனிப்பதில்லை என்று கூறுகிறார் கால்ஃப் விளையாடும் வசுமதி பாலகிருஷ்ணன். . ஒரு சமயம், அவரோடு கால்ஃப் விளையாடிய குழுவினர், இரண்டு ஆண்கள் கொம்புகளால் ஒன்றோடொன்று முட்டிக்கொண்டு சண்டையிட்டதைப் பார்த்தனர். ‘நாங்கள் நின்ற இடத்திலிருந்து சிறிது தொலைவிலேயே, இந்த ஜோடி எங்களைக் கவனிக்காது, முரட்டுத்தனமாக்ச் சண்டையிட்டுக் கொண்டன- குளம்புகள் தோண்டி தரையில் ஆழமான பள்ளங்கள் உருவாயின. பெரும்பாலாக கால்ஃப் விளையாடுபவர், மைதானத்தில் மாடுகள் தென்பட்டால் அவற்றைச் சுற்றிச் செல்கிறார்கள், மிக அருகில் அவை வந்தால் விளையாட்டை நிறுத்திவிடுவர்; , பாதுகாப்பு இல்லாது போல் தோன்றினால் மைதானத்தைவிட்டு அகலுவர்; இது அரிது.
ஆனால், காட்டுமாடுகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சம்பவம் அவ்வப்போது நிகழ்கிறது.’ இங்கு முன்பு வசித்த மஞ்சுளா அழகண்ணன், தனக்கு நேர்ந்த இரு சம்பவங்களை நினைவு கூர்ந்தார் – அவருடைய சகோதரர் நந்தா, கால்ஃப் மைதானத்தில் காட்டு மாடு துரத்தியதால் அருகே இருந்த மரத்தின்மீது ஏறித் தப்பித்துக்கொள்ள வேண்டியதாயிற்று., மற்றொரு சமயம் அவரும், அவருடைய கணவரும், கன்றுகளுடன் கூடிய மந்தை வரவே அவற்றிடமிருந்து தப்பி ஓட வேண்டியதாயிருந்தது; இரண்டு சந்தர்ப்பங்களிலும், மாடுகளைத் தூண்டிவிட்டது அவர்களின் நாய்கள்தான், ஆனால் அவர்கள் அசம்பாவிதமேதுமின்றித் தப்பித்தனர்; மற்ற பலர் காட்டு மாடுகள் தாக்கி இறந்துள்ளனர்

‘தடியன்’: உள்ளூர்வாசி வசுமதி பாலகிருஷ்ணனின் ஓவியம்
கொடைக்கானலுக்கு 1986 ஆம் ஆண்டில் வந்து, ‘தடங்கள் மற்றும் தடயங்கள்’ [TRAILS AND TRACKS] என்ற அமைப்பைத் தொடங்கிய இயற்கை ஆர்வலரும் மலையேற்ற வழிகாட்டியுமான விஜய் குமார், ,குண்டாறு நீர்வீழ்ச்சி, தூண்பாறையைச் சுற்றியுள்ள இடங்கள் காட்டுமாடுகளுக்கு நல்ல மேய்ச்சல் நிலமாகப் பரந்த புல்வெளிகளாக இருந்ததை நினைவு கூர்ந்தார். “சோலைக்காடுகள் முழுவதிலும் முப்பது முதல் நாற்பது காட்டு மாடு மந்தைகள் இருந்தன; இப்போது, மந்தைகள் சிறியவையாகிச் சிதறிக்கிடக்கின்றன. கத்திச்சவுக்கும் யூகலிப்டஸ் மரங்களும் புல்வெளிகளுக்குப் பரவி, நுண்மையான சுற்றுச்சூழல் அமைப்பை அழித்துவிட்டன. இங்குள்ள பழமையான வகைச் சோலை மரங்கள் பல இடங்களில் வெற்றிகரமாக அவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றாலும் இது எங்கும் காணப்படவில்லை. கத்திச்சவுக்குமரங்களை அகற்ற வனத்துறை செய்த பல முயற்சிகள் தோல்வியுற்றன. இவ்வகைச் சவுக்கு மிக விரைவாகப்பெருகி புல்வெளிகளை ஆக்கிரமித்துவிடுகிறது.
காட்டுப்பகுதியில் செய்வதுபோலவே, கோடைக்கானலுக்குள்ளும் காட்டுமாடு மந்தைகள், தங்கள் எல்லைகளை வரை வகுத்துள்ளன. , “கால்ஃப் கிளப்’பிரபுக்கள்”, ஃபேரி ஃபால்ஸ் மந்தை, பழையகல்லறை மந்தை, மகாலட்சுமி பங்களா மந்தை, மிஸ்டிமலைமந்தை எனப்பல பெயர்களிட்டு உள்ளூர் மக்கள் இம் மாட்டுமந்தைகளை இனம் காண்கின்றனர்..
நகைச்சுவையாக, வேரா டி யாங், ஜார்ஜ் பென்னர் இருவரும் ஸ்வீடிஷ் ஹில்லில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் தனிமையாக உலவும் காட்டு மாடுகளுக்குப் பெயரிட்டுள்ளனர் – [ BIFF, & BOB] பிஃப், & பாப்.—திறந்த கிணற்றில் விழுந்து மூழ்கிவிட்டது பாப் ; , உடலில் இதய வடிவிலான குறியிருந்ததால், வாலண்டினோ; வித்தியாசமான மீசையுடையதால் சால்வடார் டாலி
நகைச்சுவையாக, வேரா டி யாங், ஜார்ஜ் பென்னர் இருவரும் ஸ்வீடிஷ் ஹில்லில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் தனிமையாக உலவும் காட்டு மாடுகளுக்கு பெயரிட்டுள்ளனர்: பிஃப், பாப்,[ BIFF & BOB ] – திறந்த கிணற்றில் விழுந்து மூழ்கிவிட்டது பாப், உடலில் இதய வடிவிலான குறி இருந்ததால், வாலண்டினோ; வித்தியாசமான மீசையுடையதால் சால்வடார் டாலி. ! வேரா கூறுகிறார், ‘நான் 14 வருடங்களாக இங்கிருந்தாலும் டார்ச் இல்லாமல் மாலை நேரங்களில் வெளியே வந்ததில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா? வீட்டின் அருகே எப்போதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காட்டுமாடுகள் காணப்படும்.’
தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள பரந்த பேரிக்காய் தோட்டங்கள், ஃபேரிஃபால்ஸுக்கு அருகிலுள்ள சோலைகளுடன் இணைந்த பழத்தோட்டங்கள் மற்றும் பேரிஜம் இருக்கும் பரப்பு, – இப்பகுதிகள் எப்போதும் காட்டுமாடுகளுக்கு ஒரு புகலிடமாக உள்ளது.

சால்வடார், சமீபத்தில், கோடைக்கானல்வாசிகளான ஜார்ஜ் பென்னர், வேரா டி யாங்
ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விருந்தில் முதல்விருந்தாளி, (புகைப்படம்: ஜார்ஜ் பென்னர்)
நகரத்தின் நடுவில் அமைதியாக ,உலாவரும் ஒரு கௌரைப் பார்ப்பது அசாதாரணமானது அல்ல; பெரும்பாலானோர் அவற்றின் பெரிய உருவங்களைப் பார்க்கும்போது பயப்படுகிறார்கள்.. நாட்டுமாடுகளைப் போலல்லாமல், இவைகளின் குணாதிசயமான விசில் சத்தத்தையும், சில நேரங்களில் அவற்றின் ஆழ்ந்த உறுமல் ஓசையையும் நீங்கள் அருகாமையில் நடந்துசெல்லும்போது கேட்கலாம்.
கடந்த ஆண்டு, கொடைக்கானலுக்குப் புலம் பெயர்ந்த சமூகத் தொழில் முனைவர், ஸ்மிருதி லாமெக், திடீரென தன்னை ஒரு மந்தை சூழ்ந்த சம்பவத்தை விவரிக்கிறார். ‘நான் ஃபெர்ன்ஹில் சாலையில் ஹெட்ஃபோன்கள் அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தேன், அருகில் இருந்த வேலையாட்கள் என்னை எச்சரிக்க முயன்றதை உணராமல் அவர்களுடைய சத்தம் கேட்டு நான் திரும்பிக் கை அசைத்தேன்; ;என்ன நடக்கிறதென்றே அறிவதற்கு முன், சாலையின் ஓரத்தில் நான் இருப்பதை கவனிக்காமல் மேய்ந்து கொண்டிருந்த இருந்த ஒரு மந்தையின் சுமார் இருபது காட்டு மாடுகள் என்னைச் சூழ்ந்து விட்டன.’ என்ற ஸ்மிருதி, ஆரம்ப பீதிக்குப் பிறகு, அந்தத்தருணத்தைப் பதிவு செய்ய விரைவாக ஃபோனை எடுத்ததாகச் சொன்னார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜன்னல் வழியாக ‘ட்ரோக்’ [TROG] : (ஆசிரியரின் வீட்டிற்கு அருகில் வாழும் ஒரு கௌருக்கு கொடுக்கப்பட்ட பெயர்)
(புகைப்படம்: லதிகா ஜார்ஜ்)
இதேபோல், சுற்றுலாப் பயணிகள் பலர் ,அவை பெரியஅளவிலுள்ள நாட்டு மாடுகள் என்று நினைத்துக்கொண்டு கடந்து வருவதை நான் பார்த்திருக்கிறேன். மந்தைகள், பெரும்பாலும், நெரிசலான கிராமங்களைத் தாண்டி, குழந்தைகள் விளையாடும் தெருக்களில் கூட , ஏரியைச் சுற்றி, உள்ளூர் மக்கள் நடந்துசெல்லும்போது அவர்களுடன் சேர்ந்து செல்கின்றன.
பெரும்பாலான கோடைக்கானல்வாசிகள், காட்டு மாடுகளைப் பார்க்கும்போது மற்றவர்களை எச்சரிக்கும்படிக் கூப்பிட்டு அவற்றிற்குத் தொந்திரவில்லாமல் இணைந்து வாழ்வதற்குப் பழகிவிட்டனர். பலர், காட்டுமாடுகள், வளர்க்கப்பட்ட மாடுகளைப் போல பழகிவிட்டதாக சர்வ சாதாரணமாக அவைகளுனூடே நடந்து செல்கிறார்கள். என் வீட்டின் அருகிலுள்ள விவசாயியான வேலன் என்னிடம் கூறுகையில், ‘குழந்தைகள் விளையாடும் தெரு வழியாக எங்கள் கிராமத்தை கடந்து காட்டுமாடுகள் செல்வதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். உண்மையில் மாடுகள், காட்டுப்பன்றி அல்லது முள்ளம்பன்றி செய்வது போல் வயல்களுக்கு அதிக தீங்கு விளைவிப்பதில்லை. எங்களது பயிர்களை இழக்க முடியாது. பல விவசாயிகள்காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி முதலியவற்றைக் கட்டுப்படுத்த எலி விஷத்தை பயன்படுத்துகின்றனர், இது நல்லதல்ல. இதனை, அரசு தீவிரமாகக் கையிலெடுத்து எங்களுக்கு உதவ வேண்டும்” என்கிறார்..
விவசாயப்பணியாளர்களான பி.அய்யம்மாள், எஸ்.ஜெயலட்சுமி போன்ற பலர் கடுமையான அனுபவங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஜெயலட்சுமி, ஒரு காட்டு மாட்டு மந்தையைப்பார்த்து பயந்து ஓடியபோது காயமடைந்ததால், இப்போது எச்சரிக்கையுடன் வயலுக்குச் செல்கையில் சுற்று வழியிலேயே போகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு, திடீரென சமையலறை ஜன்னலின் வெளியே தெரிந்த ட்ரோக்கின் முகம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவனுடைய தலையின் மேற்புறம் ஜன்னலின் சாளரத்திற்குக் கீழே இருந்தது. மேலும், மேயக் குனிவதற்கு முன்பு அவனுடைய அழகிய பெரிய கண்களுடன் அவன் என்னை ஆத்மார்த்தமாகப் பார்த்தான். ட்ரோக், ஒரு வயது முதிர்ந்த, மனித அறிவுள்ள புத்திசாலியான விலங்கு போலத் தோன்றினான். அவனால் மட்டும் பேசமுடிந்தால், — நான் கற்பனை செய்தேன், – அவன் நமக்குசொல்லக்கூடிய கதைகள் பல இருக்கும்.- நீரோடைகள் நிஜமாகவே வறண்டு விட்டனவா ? பழக்கப்பட்ட நிலப்பரப்புகள் மாறிவிட்டனவா? மேலும் அவை ஏன் மேற்குத் தொடர்ச்சி மலையில், பசுமையான மேய்ச்சலுக்கு உகந்த இடங்களிலிருந்து மனித வாழ்விடங்களுக்கு இடையில், நெரிசலான இடங்களில் வாழ வந்தன ?

ஒரு பிளாஸ்டிக் வளையத்தில் கால் மாட்டிக்கொண்டு மெலிந்து தனியாக உலவும் காட்டு மாடு ; குறைந்தது மூன்று இடங்களில் ஊருக்குள் சுற்றித் திரிவதைக் கண்டதாக ஒரு வனக்காப்பாளர் தி கோடை க்ரோனிக்கிளிடம் கூறினார் (புகைப்படம்: லதிகா ஜார்ஜ்)

காட்டு மாடுகள், நகரத்தின் குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் உணவைத் தேடுவதைக் காணலாம், அதில் அபாயகரமான பொருட்களும் இருக்கலாம் (அசுத்தமான உணவு, கண்ணாடி, முள்வேலி துண்டுகள், பிளாஸ்டிக்); இது ஒருவரின் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருக்கிறது, ஆனால் அந்த இடம் குப்பைத் தொட்டிகளிலிருந்து வெகு தூரத்தில் இல்லை (புகைப்படம்: லத்திகா ஜார்ஜ்)
வாழ்க்கைத் தரம் உயருவதற்காக, நகரங்களுக்கும் தொலைதூர நாடுகளுக்கும் குடிபெயரும் பல மனிதர்களைப்போல், ஒருவேளைகாட்டு மாடுகள் வழிமாறி வந்துவிட்டால், அவைகளின் பழைய இடத்திற்கு அனுப்பப்படலாம். திருப்பதியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐஐஎஸ்இஆர்) உதவிப் பேராசிரியர், டாக்டர். விவி ராபின் குமார், இது சாத்தியமானது என்று நினைக்கவில்லை. ‘அவைகள் திரும்பி வரலாம் அல்லது மற்ற விலங்குகள் இடம்பெயர்ந்து வரும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. மகாராஷ்டிராவில் சிறுத்தைகளை இடமாற்றம் செய்வது பற்றிய ஆராய்ச்சி இதனை மிகவும் தெளிவாகக் காட்டுகிறது. மோதல்களைக் குறைக்க முயற்சிப்பது மட்டுமே இதற்கு பதில். ’அவர் எனக்கு ‘அஜோபா’ என்ற திரைப்படத்தை அனுப்பினார். அது வயதான சிறுத்தையை இடமாற்றம் செய்தது எவ்வாறு சோகத்துடன் முடிந்தது என்று உணர்த்தியது.
எனினும், வெவ்வேறு இனங்களின் செயல்பாடுகள் வேறுபடுகின்றன. மேலும் கௌர்களின் இடமாற்றம் குறித்துக் கவனமாகத் திட்டமிடுவதன் மூலம் வெற்றி கிடைக்கலாம். மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர, காட்டுமாடுகள், அவைகளின் இயல்பான வாழ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவதற்கான காரணங்கள் உள்ளன. காட்டுமாடுகள் (அதன் அமெரிக்க உறவினரான ‘காட்டு எருமை’ மற்றும் ஐரோப்பாவின் “பைசன் போனாசஸ்” போன்றவை ] 15 மணி நேரம் வரை உணவுண்ணும்; , மண்ணை தங்கள் குளம்புகளால் கிளறுவதாலும், புல்வெளிகளில் போகுமிடம் எல்லாம் சாணம் போடுவதாலும் விதைகளைப் பரப்பி புதிய வளர்ச்சியைத் தூண்டுகிறது.. ஒரு காலத்தில் அமெரிக்காவின் பெரிய சமவெளிகளில் சுற்றித் திரிந்த காட்டெருமை போன்ற இந்தியக் காட்டுமாடுகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் புல்வெளிகளிலும் கரிமப் பிரிப்பு செயல்பாட்டில் [ உமைர் இர்பான், 2018-ல் ஆராய்ந்தது ] முக்கிய பங்கு வகிக்க முடியுமா?
புல்வெளி, சுற்றுச்சூழல் அமைப்புகள் எல்லா இடங்களிலும் ஆபத்தான நிலையில் உள்ளன மற்றும் குறிப்பாக மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படுகின்றன. காட்டுமாடுகள், அவற்றின் இயற்கையான நிலப்பரப்பிற்குத் திரும்பினால், புல்வெளிகளின் மீளுருவாக்கம் அதிக கார்பன் டை ஆக்சைடை வைத்திருக்கும் வகையில் மண்ணின் திறனை மேம்படுத்தலாம், இதனால், இயற்கையாக கார்பன் சேமிப்பிற்கு வசதியாக செயல்படும். இந்த காரணத்திற்காகவே, ஐரோப்பா முழுவதும் காட்டெருமைகள் புல்வெளிகளுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, புல்வெளி மேலாண்மைக்கான ‘மூலதன இனங்கள்’ என அவற்றின் பங்கை அங்கீகரித்தது (‘ஐரோப்பிய பைசன் திரும்புவது “’ என்ற பதிப்பில் விளக்கப்பட்டது).
‘முழுமையான மேலாண்மை’யை ஆதரிக்கும் சுற்றுச்சூழலியல் வல்லுநர், ஆலன் செவோரி,’ பூமியில் முன்பு அலைந்து திரிந்த விலங்குகளின் இயற்கையான நடமாட்டத்தைப்போல்
இப்போதுமிருந்தால், இக்காலத்திய விலங்குகளும் இயற்கைச் சுழற்சியின் ஒரு பகுதியாக மாறி, மேய்ச்சல் நிலத்தை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வந்து, கார்பனைப் பிரித்தெடுத்து, புல்வெளிகளை மீளுருவாக்கம்செய்து , அதன்மூலம் காலநிலை மாற்றத்தைக் குறைக்கவும், ஏன் அதை மாற்றியமைக்கவும் செய்ய முடியும்.

வீட்டு (காடும் சேர்ந்த] உலகம்: வேரா டியாங் அவரது வீட்டில் – ஒரு காட்டு மாட்டுடன் : (புகைப்படம்: ஜார்ஜ் பென்னர்)
பட்டாம்பூச்சி விளைவு (சிறிய விஷயங்கள்கூட உலகளாவிய சிக்கலான பிரச்சினைகளில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து ] :
காட்டு மாடுகள் அவற்றின் இயல்பான வாழ்விடத்திற்குத் திரும்புவதால் காலநிலையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் அது ஊக்கமாற்றமாக இருக்கலாம். காட்டு மாடுகளைப் பொறுத்தவரை, அவைகளை நகரங்களிலிருந்து மீண்டும் வனத்திற்கு அனுப்புவது இந்தியாவில் இன்னும் முயற்சிக்கப்படவில்லை. மாடுகள் தங்குவதற்கு அகன்ற புல்வெளிகள் முதலில் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று சிலர் வாதிட்டாலும், காட்டுமாட்டு மந்தைகள் திரும்பியவுடன், இயற்கை மீளுருவாக்கம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது

ஒரு நீலகிரி வரையாடு சாலையைக் கடக்கிறது (புகைப்படம்: நசீப் நௌஷத் )
‘ நகர வாழ்வில்’ ஆர்வம் கொண்டமற்ற விருந்தினர்கள் – பயிர்களைக் கொள்ளையடிக்கும் காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீண்ட வால் குரங்கு, அவ்வப்போது வரும் சிறுத்தை; இவை விவசாயத்திற்கு சேதம் உண்டாக்குவதோடு ஆபத்தானவையுமே ஆகும். நீலகிரி வரையாடு, பறக்கும் அணில், காட்டுமுயல், நகர்ப்புறங்களுக்குக் குடிபெயர்ந்த பல்வேறு பறவை வகைகள் ஆகியவை வருவது மிக மகிழ்ச்சி தரும் இடப்பெயர்ச்சி.. உள்ளூர் விவசாயிகளின் கூற்றுப்படி, காட்டு மாடு மட்டுமே மனித குடியிருப்புகளுக்குள், தாம் தங்க வசதியான இடங்களைக் கண்டுபிடிப்பவை. மீதமுள்ள – காட்டுப்பன்றி, முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், மான் ஆகியன – அருகிலுள்ள காடுகளிலிருந்து அவ்வப்போது அல்லது அடிக்கடி வந்துபோகும். 2020-ஆம் ஆண்டில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் / வனவியல்துறை, விவசாயிகளின் வற்புறுத்தலின் காரணமாக , விளைச்சல் பயிர்களை அழிக்கின்றன என்ற முகாந்தரத்தால், பதினோரு வனப் பிரிவுகளில் காட்டுப் பன்றிகளை வேட்டையாடிக் குறைக்க அரசு உத்தரவைப் பிறப்பித்தது. முள்ளம்பன்றி மற்றும் பிற உயிரினங்களுக்கு வெவ்வேறு தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். ஆனால், காட்டுமாடுகளின் இடமாற்றம் வெற்றிகரமாக இருக்குமானால், மற்ற இனங்களும் அதைப் பின்பற்றும் சாத்தியம் உள்ளது.

வட்டக்கானலில் மலையேறுபவர்களை கவனிக்காமல் பறக்கும் அணில் ஒன்று செல்கிறது (புகைப்படம்: ரஜினி ஜார்ஜ்)
சமவெளிகளில் சாதாரணமாக வசிக்கும் மயில்களை, சமீபத்தில், பல உள்ளூர்வாசிகள் தங்கள் தோட்டங்களில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். பறவை சூழலியல் மூலம் பல்லுயிரியலைப் படிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குழுவான “ ஷோலா ஸ்கை தீவுகள் “ [ SHOLA SKY ISLANDS ] உறுப்பினரான டாக்டர். குமார், “ மயில் வகை இனங்கள், மலைப்பிரதேசத்தில் காணப்படுவதென்பது இப்போது பல மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிகழ்கிறது. என்று கேரளாவில் நடத்தப்பட்ட வாழ்நில ஆய்வொன்றை எனக்குக்காண்பித்தார். காலநிலை மாற்றம், சமவெளி உயிரினங்கள் மலை உயரங்களுக்கு சிறிது சிறிதாகத் தம்மை வழக்கப்படுத்திக்கொண்டு செல்வதை அதிகரிக்கக்கூடும். மேற்கூறியவை சுயாதீனமாக ஏற்படாமலுமிருக்கலாம், ஏனெனில், இது விளைநிலங்கள் அதிகரிக்கும்போது ஏற்படும் நிலப்பரப்பு மாற்றத்துடன் இணைவதாகவும் இருக்கலாம்.
“காட்டு மாடுகளைப்பற்றிய பிரச்சினை சிக்கலானது, அவற்றின் வாழ்முறைகளைப்பற்றி இன்னும் அதிக அளவில் ஆராய்ச்சி தேவை – அது வரை நாம் காட்டு மாடுகளோடு இணைந்து வாழ்வதே சிறந்தது “ என்கிறார் டாக்டர் குமார்.

கொடைக்கானலுக்கு மயில்கள் வருவது புதிது ; இங்கே நகரில் ஒரு வீட்டினருக (புகைப்படம்: ஷெரின் சேத்தன்)
இந்த ஆண்டின் துவக்கத்தில், எங்களுக்கு அருகாமையில் ஒருநாள் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே பலத்த சத்தம் ஒன்று கேட்டது. இன்னும் இருட்டாக இருந்ததால், எதையும் பார்க்க முடியவில்லை. காலை ஆறு மணியளவில் பார்க்கும்போது ஒரு பெரியகாட்டுமாடு மழைநீர் சேகரிக்கும் தொட்டியின் கூரையில் விழுந்து, கூரை உடைந்து நீரில் மாடு மூழ்கியுள்ளதைப் பார்த்தனர்.. அந்த க்ஷணமே, அது தனிமையாக உலவும் ‘ட்ரோக்’, என்று என் உள்ளுணர்வு கூறியது. உண்மையில், அதன் பின் அவன் மீண்டும் காணப்படவில்லை!
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 இன் அட்டவணை ஒன்றில் சேர்க்கப்பட்டு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) சிவப்புப்பட்டியலில் ‘பாதிக்கப்படக்கூடியவை’ என்று பட்டியலிடப்பட்டுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் புல்வெளிகளையும் சோலைகளையும் வாழ்விடமாகக் கொண்ட கௌர், பெரும்பாலும் காட்டு மாடு என்று அழைக்கப்படுகிறது. இவை பொதுவாக ஒரு குழுவில் ஐந்தல்லது அதற்கு மேல் இருக்கும் முழுமையாக வளர்ந்த முப்பது ஆண், பெண் கன்றுகளுடன் கூடிய குழுவாகவுமிருக்கும். ஆண் காட்டு மாடுகள், பெரும்பாலும் தனியாக செல்கின்றன, மேலும் வயதான காளைகள் இயற்கையில் தனிமையாக வலம் வருபவை என்று நம்பப்படுகிறது. முழுமையாக வளர்ந்த, ஆண்மாடுகள் ஏழரைஅடி உயரமும் ஒரு டன் எடையும் உள்ளவை. பெண் மாடுகள் சற்றுக் குறைவாக இருக்கும். புல், இலைகள், இளந்தளிர்களை உண்ணும் பழக்கமுள்ள சராசரி மாடு, ஒரு நாளைக்கு பத்திலிருந்து பதினைந்து மணி நேரம் மேய்கிறது.