ஏறக்குறையப் பத்தாண்டுகளாக, தினந்தோறும் காலையில் கோடைக்கானல் ஏரியைச்சுற்றி நடக்கும் வழக்கமுள்ளவர் திரு ஃபாரூக் முகமது – கார்டன் மேனரிலிருந்து பிரையன்ட்ஸ் பார்க் வரை செல்லும் பாதை மாறாது – அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலையும் புதியது – வானமும் மேகங்களும் வெவ்வேறு வடிவத்திலிருக்கும் – “நீங்கள் ஒரு ஓவியராகவோ புகைப்படக் கலைஞராகவோ இருக்க வேண்டியதில்லை. அதைப் பார்த்து அனுபவிக்க நீங்கள் அங்கு இருக்க வேண்டும். அவ்வளவுதான் – இங்கு வசிப்போருக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும்: கோடை மிக அழகாக இருக்கும்போது, எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.!!”
ஃபாரூக்கின் திறமை அவரது போன் கேமரா மூலமாகவே வெளிப்படுகிறது- கோடைக்கானலின் அழகிய திறந்த வெளிப்பரப்புகள் மிகச்சிறந்த புகைப்படங்களாகியுள்ளன. பொழுதுபோக்காகத் தொடங்கியது ஓர் சிறந்த கலையாக, ஓவியங்களாகிவிட்டன. எனினும், அவர் மிகப்பணிவுடன் “நான் ஒரு கற்றுக்குட்டி” என்றே கூறுகிறார். ‘நான் காதில் இயர்போன்கள் மாட்டிக்கோண்டு ஏரியைச் சுற்றி நடப்பேன்; ஒரு நாள், ஏரியில் நான் பார்த்த ஒருபடகை என் போனில் படமெடுத்தேன். அதுதான் எனது முதல் நல்ல புகைப்படம்.! “கூகுள்நெக்ஸஸ்4” என்ற அந்த,ஃபோன் மிகச் சிறந்த கேமராவுடன் கூடியதாகையால் அதையே வாங்கிவிட வேண்டும் எனப் பலமுறை முயற்சித்தபோது அவினாஷ் [மன்சீஸ் உரிமையாளர்] அதற்கு உதவியதாகக் கூறும் ஃபாரூக் : “நான் உபயோகிக்கும் சாதனங்களைப் பற்றித் துல்லியமாகத் தெரிந்துகொண்டுதான் பயன் படுத்துவேன்” என்கிறார்.
“கோடைக்கானல்வாசிகளுக்கு நான் ஒன்று சொல்ல வேண்டும் : இந்த ஊர் மிக அழகாக இருக்கும்போது, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் !! “
ஃபாரூக் முகமது
ஞாயிறு காலை வேளைகளில் [தற்சமயம் காஷ்மீரில் வசிக்கும்] அவர் மகள் அரீபாவோடு நடக்கச் செல்வது அவரது வழக்கம்; ஃபாரூக் இங்குள்ள சிறிய காஷ்மீர் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறார். இதில், சுமாராகப் பத்துக் குடும்பங்கள்; அனைவரும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்
அரீபா கோடைக்கானலைப் பற்றித் தொலைபேசியில் ஆர்வத்துடன் பேசுகிறார். ‘ அது என் வீடு, நான் வளர்ந்த இடம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், நானும் என் தகப்பனாரும் நடக்கச்செல்லும்போது ஒரு மலைக்காட்சியைப் பார்வையிடவோ, காடுகளின் வழியாகவோ செல்வோம். அவர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். புகைப்படங்கள் எடுப்பது என்பது அதற்கு முன் அவருக்கு தோன்றியதில்லை. கோடைக்கானல் அவருக்குள் இருந்த கலைஞரை வெளியே கொண்டு வந்திருக்கிறது, “என்று கூறுகிறார் அரீபா
அவரது வழக்கமான தொப்பியுடனும் இயல்பான புன்சிரிப்புடனும் காணப்படும், ஃபாரூக்கை கவனிக்காமலிருப்பது கடினம்: கோல்டன் பார்க்ஸ் விடுதியின் அருகிலுள்ள அவரது கடைக்கு வெளியே காணப்படும் அவர், மற்றக் கடை உரிமையாளர்களுடனும் அவ்வழியே செல்லும் தெரிந்தவர்களுடனும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பது வழக்கம். ஃபாரூக், கோடைக்கானலில் நன்கு அறியப்பட்ட, மிகவும் விரும்பப்பட்ட ஒருவர், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வாழ்ந்துள்ள அவர், எல்லோரையும் தன் கடைக்குள் அழைத்துப் பேசுவதில் ஆர்வம் காட்டுபவர் – வந்தவரை வெறும் கையோடு அனுப்பாமல், கடைக்குள் வந்தவருக்கு ஏதாவது சிறு அன்புப் பரிசாவது கொடுக்கும் வழக்கமுடையவர்
ஃபாரூக்கின் படவரி
நாங்கள் கடைசியாகச் சந்தித்தபோது, கோல்டன் பார்க்ஸ் அருகில், ஃபாரூக் எனக்கு இரு பெரிய பைகளில் காஷ்மீர மிளகாயை பரிசளித்தார், அவை இரண்டு ப்ளாஸ்டிக் பைகளில் ஒன்றுக்குள் ஒன்றாகப்பொதிந்திருந்தாலும் அதன் மணம் மனத்தை அள்ளியது. ஃபாரூக்கின் வழக்கமான பரிசு – காஷ்மீரில் வளரும் இளஞ்சிவப்பு நிறமுள்ள அப்போது விளைந்த குங்குமப்பூதான். இது, கோடைக்கானல் அல்லது பெங்களூருவில் உள்ள எனது வீட்டிற்கு மணம் சேர்க்க அடிக்கடி வருவது வழக்கமாகி விட்டது..

ஃபாரூக் முகமது தனது கடையில், தி கிராஃப்ட் செயின்(புகைப்பட உபயம் ஃபாரூக் முகமது)
வால்நட் மரச்சாமான்கள்தான் எங்கள் குடும்ப வர்த்தகம். ‘நாங்கள் காஷ்மீரில் ஏராளமாக வளரும் வால்நட் மரத்தால் பலவிதமான கைவினைப்பொருட்களும் மரச்சாமான்களும் தயாரிக்கிறோம். நாங்கள் பலதலைமுறைகளாக இவ்வியாபாரம் செய்துகொண்டிருக்கிறோம்,’ என்று அவர் கூறுகிறார்.
ஆகஸ்ட்மாதம், ஒரு பிற்பகலில் ,நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில், ஓரிரு பார்வையாளர்கள் ஃபாரூக்கின் கடை, தி கிராஃப்ட் செயினுக்கு வருகிறார்கள். மறு பக்கத்திலிருந்து எனக்குக் கேட்கிறது ―‘உங்களுக்கு நான்கு முக கவசங்கள் வேண்டுமா? பரவாயில்லை இரண்டிற்கு மட்டும் பணம் செலுத்துங்கள்.” என்ற ஃபாரூக்கின், பேச்சால் வருபவர் மகிழ்ச்சியுற்று விடைபெற்று சில நிமிடங்களுக்குப் பிறகு புறப்படுகிறார்கள் !!
ஃபாரூக் ஒரு மிகச் சிறந்த விற்பனையாளர், – அவரால் ஒரு எஸ்கிமோவுக்குகூட ஐஸ் விற்கமுடியும்! எங்கள் குடும்பங்கள் காஷ்மீரில் ஓரு பாலத்தின் இருபுறத்தில் வாழ்கின்றோம்; நாங்கள் சென்னையில் ஒன்றாக வேலை செய்தோம்; என் அப்பா அடிக்கடி அவருடைய குடும்பத்தாரிடம் இருந்து வால்நட் மரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவார். அவர் ஒரு நேர்மையான தாராளகுணமுடைய மனிதர்-என்கிறார் இர்ஃபான்.
ஃபாரூக் கடையைத் திறக்கும் போது, வேலை நாள், காலை 10 மணிக்கு தொடங்குகிறது. “அதிகம் வாடிக்கையாளரில்லாது அமைதியான நாளாக இருந்தால், நான் இசை கேட்பேன், புத்தகங்கள் படிப்பேன், தவிர சினிமா நான் மிகவும் விரும்புவது.. என் கடைக்கு நிறைய வெளிநாட்டவர்கள் வருகிறார்கள் மக்கள் நிறைய வருவது எனக்கு மிகவும் பிடிக்கும் -நான் வழக்கமாக அவர்களை உட்கார வைத்து அவர்களுடன் அளவளாவுவேன். இதனால் தான் உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படங்களைப் பெறமுடிகிறது. அவை பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய ஆழமான நுண்ணறிவைக் கொடுப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.”

கடையில் அப்படிதான் நடக்கிறது – தரையிலிருந்து உட் கூரை வரை சிறு சிறு அழகிய பொருட்கள் நிரம்பியுள்ளன. –மக்கள் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக வந்து அளவளாவத் தங்கிவிடுகிறார்கள் – வந்ததால், ஏதேனும் வாங்கவும் வாங்குவார்கள்.
‘ஃபாரூக் “ஒரு சிறந்த விற்பனையாளர், அவரால் ஒரு எஸ்கிமோவுக்குக்கூட ஐஸ் விற்றுவிட முடியும்.” என்று நகைச்சுவையாக கூறுகிறார் இர்பான் என்று ஊர் முழுதும் நன்கு அறியப்பட்ட லியாகத் ஷாஃபி ! ஃபாரூக்கின் பழமையான நண்பர்களில் ஒருவரான அவர் கோடையில் மூன்றாம் தலைமுறையாக வசிப்பவர். “எங்கள் குடும்பங்கள் காஷ்மீரில் ஒரு பாலத்தின் இருபுறமும் வாழ்கின்றோம். நாங்கள் சென்னையில் ஒன்றாக வேலை செய்தோம், என் அப்பா அவருடைய குடும்பத்தாரிடம் இருந்து வால்நட் மரத்தாலான பொருட்கள் வாங்குவார். அவர் ஒரு நேர்மையான, தாராள குணமுடைய மனிதர். அவர் என் தந்தையையும் என் குழந்தைகளையும் நன்கு அறிவார் ―அவர்கள் எல்லோருக்கும் சிறந்த நண்பராக இருக்கிறார். அது அவரைப் பற்றிய சிறந்த விஷயங்களில் ஒன்று – எந்த வயதினராக இருந்தாலும் அல்லது எங்கிருந்து வந்திருந்தாலும் எல்லோருடனும் ஒரே போல் இருப்பார். நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம் என்றாலும் போட்டியாகவும் கடைகளை நடத்தி வருகிறோம். ஆனால், ஃபாரூக்கை பொறுத்தவரையில், எங்கள் சமூகத்திற்குள் நாம் காணும் கடுமையான போட்டியைப் போல ஒரு போதும் இல்லை. நான் என் நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அவரது கடைக்கு அழைத்துச் செல்வேன், அவரும் அதே போல்தான்.”




முதன்முதலாக 1981-ல் 16 வயதாகும்போது தனது மாமா குலாம் ஹாசனுக்கு அவரது கைவினைப் பொருட்கள் கடையில் உதவி செய்ய இங்கு வந்த ஃபாரூக் அப்போது, இந்த நகரம் மிகவும் வித்தியாசமான இடமாக இருந்தது என நினைவு கூர்ந்தார்.
‘கோடைக்கானல் மிகவும் அமைதியான ஊராக இருந்தது. இரவு 7 மணிக்கு நாங்கள் கடையை மூடிவிடுவோம், அதற்கு மேல் நீங்கள் யாரையும் சாலையில் பார்க்க மாட்டீர்கள்”. நகரத்தில் ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே இருந்தன; தற்போது அவரது கடை இருக்கும் இடத்தில் சோலையாக மரங்கள் இருந்தன, கோடைக்கானல் சர்வ தேச பள்ளியின் (KIS) வெளியே பறக்கும் அணில்களைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உண்மையாகவே ஒருவன் ஒரு பறக்கும் அணிலை முயற்சித்துப் பிடித்து, அதை ஏழு ரோடு சந்திப்பில் விற்க முயன்றான் !” என்று நகைச்சுவையாகச் சொல்கிறார் இர்ஃபான்


அந்தக்காலத்தில் எல்லோரும் எங்கும் நடந்தே செல்வார்கள். ஒரு சிலரிடம் மட்டுமே இரு சக்கரவாகனங்கள் இருந்தன. கோடைக்கானல் கலையரங்கம் தியேட்டரில், மக்கள் பொழுது போக்கிற்காக திரைப்படங்கள் இயக்கப்பட்டன. .ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திரைப்படம் இயக்கப்பட்டு, கடைசியில் 1987-ல் திரை அரங்கமே மூடப்பட்டது. அதன் எதிரே இப்போது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அலுவலகம் உள்ளது. ‘நாங்கள் வாரத்தில் ஏழு படங்கள் பார்ப்போம்’ அதன் பிறகு, நான் வீட்டுக்குச் செல்வதற்குப் பதிலாக, திரும்பி வந்து என் கடையில் தூங்குவேன்.’ என்று சிரிக்கிறார் ஃபாரூக்.

அவர் குடும்பம் சென்னையில் மற்றொரு கடையை வைத்திருந்தது. அதைக் கவனித்துக்கொள்ள சென்னைக்குச் செல்வதற்கு முன்பு, எண்பதுகளில் கோடையில் ஆறு ஆண்டுகள் வசித்தார். 2000ஆம் ஆண்டு கோடைக்கானலுக்குத் திரும்புவதற்கு முன்பு சென்னையில் 13 ஆண்டுகள் வசித்துப்பின் தனது குடும்பத்துடன் இங்கேயே இருந்துவிட்டார்.
‘இந்த ஊரிலிருப்பது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே தருகிறது, நான் என் வாழ்வின் பெரும்பகுதி தென்னிந்தியாவிலும் கோடைக்கானலிலும்தான் இருந்திருக்கிறேன்”,’என்கிறார் ஃபாரூக்.
‘நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம்: நாம் வாழும் இடத்தின் ஒரு பகுதியாக மாறி, அதுவே நம்முடன் வாழத்தொடங்கிவிடுகிறது. இப்போது ,நான் காஷ்மீருக்குப் போனாலும் சில நாட்களுக்குப் பிறகு என் மனம் சோர்வடைந்து விடுகிறது – எல்லாமே மாறிவிடுவதால், சந்தர்ப்பங்கள் எனக்குப்பொருந்துவதும் அவற்றில் என்னைப் பொருத்திக்கொள்வதும் கடினம், .”- என்று தீர்மானமாகச் சொல்கிறார்.
