முஸ்ஸூரீ
கடல் மட்டத்திலிருந்து உயரம் : 2005 மீ.
இடம்: உத்தராகண்ட் : மாநிலத்தில் டெராடூன் மாவட்டம்.
மக்கள் தொகை : 22,557
குடும்பங்கள் : 4689
நிறுவப்பட்டது : 1827
சீதோஷ்ணம் : 1.1 – 32 டிகிரீ செல்ஸியஸ்
உத்தராகண்ட் மா நிலத்திலுள்ள முஸ்ஸூரியில் அதன் பதின்மூன்று வார்டுகளிலிருந்தும் ஒருநாளில் சேரும் பன்னிரண்டிலிருந்து இருபது டன் கழிவுகளும் ஒரே லாப நோக்கமற்ற அமைப்பு – NGO- கையாளுகிறது. ஆனால், முதலில் 1995ல் ஆரம்பித்தபோது, அதுவும்,ஒரேஒருவர் ஒரு தெருவைச்சுத்தமாக்கிக் கொண்டிருந்தபோது இந்த ஒற்றுமை இல்லை.

முஸ்ஸூரியில் மக்கள் ஏற்பாட்டுடன் ஆரம்பித்த கழிவு மேலாண்மை இயக்கம் இந்தியாவில் வேறு எங்குமில்லாதது – ஆரம்பித்தவர் இருவருமே இந்தியரல்லாதவர் – அங்குள்ள வுட்ஸ்டாக் பள்ளியில் ஆசிரியர்களான ரிச்சர்ட் வெக்டர், டானா க்ரைடர் இருவருமே அமெரிக்கர்கள்.

உத்தராகண்ட் உணவக உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவரான சந்தீப் சாஹ்னி, எப்படி எல்லோரையும் ஒன்று சேர்த்து இவ்விதம் ஊரை நன்றாக்க முடிந்தது என்று கோடை கிரானிகிள் நிருபர் கேட்டபோது கூறியது : வெளி நாட்டவர் ஒருவர், தன் வேலையை விட்டுவிட்டுத் தனது ஓய்வூதிய நிதியையும் இந்தஊரைச் சுத்தப்படுத்துவதில் செலவழிக்கிறார் என்பது எங்களெல்லோருடைய உள்ளத்தையும் தொட்டது.- நாங்களும் எங்கள் ஊரை நேசிக்காமலில்லை; எங்கள் எல்லோருக்கும் சுற்றுலாதான் வாழ்வாதாரம், ஊரை நன்கு பேணிப்பாதுகாத்தால்தான் பயணியரும் அதிக அளவில் வருவர். இதனால்தான் எங்கள் சங்கமே ஒன்று சேர்ந்துவிட்டது .என்றார். கழிவு மேலாண்மையில் பொறுப்புள்ள முஸ்ஸூரி நகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரியான டாக்டர் ராஜேஷ் குமார் சிங், என்பவரும் இதையே ஆமோதிக்கிறார்.
இந்த இயக்கத்தைப்பற்றித்தெரிவிக்கையில் “கீன்” என்ற லாப நோக்கமில்லா அமைப்பை உருவாக்கிய டானா க்ரைடர், ரிச்சர்ட் வெக்டரைப் பற்றியும் அவர் எந்தப்பலனையும் எதிர்பார்க்காமல் எப்படி ஊரைச்சுத்தமாக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார் என்பது பற்றியும் கூறுகிறார். – “ கணிதமும் கம்ப்யூட்டரும் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர், மற்றவர்களை விடச்சற்று வித்தியாசமானவர், பள்ளிக்குச் செல்லும்போதும் வரும்போதும் தோளில் இரண்டு பைகளைச்சுமந்து வருவார்- ஒன்றில் பாடப்புத்தகங்கள்,மற்றொன்றில் வழியில் கண்டேடுத்த குப்பைகள். பலமாதங்கள் இவ்விதம் சென்றபின், நாங்கள் சில பணியாளர்களை வேலைக்கமர்த்தி அவர் போகவர வழியிலிருந்த கழிவு நீரோடைகளைச் சுத்தம்செய்தோம் – சேர்ந்த கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயற்சித்தோம். பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே ஒரு புரிதல் ஏற்பட்டு, க்ளீன் [CLEAN-CAREFOR ANDLEARNINGFROMTHEENVIRONMENT] எனும் அமைப்புஏற்பட்டது .க்ளீன், ஆரம்பத்தில் அருகிலுள்ள மலைப்பகுதிகளைச் சுத்தப்படுத்தியது.
பின்னர்,அனுதாபிகளான சில நகர்வாசிகளைக்கொண்டு வுட்ஸ்டாக் பள்ளியின் உணவுக்கழிவுகளையும், பிறகு பள்ளியிலிருந்து வரும் மொத்தக்கழிவுகளையும் நிர்வகிக்க ஆரம்பித்தது
க்ளீன் என்னும்பெயர் கீன் [CLEAN TO KEEN] என்று மாறியதோடு பள்ளிக்கூடத்தின் கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்துவதிலிருந்து முஸ்ஸூரியின் நகராட்சி வார்டு
ஒன்றையும் சுத்தப்படுத்த ஏற்பாடுகள் நடந்தன. முஸ்ஸூரி நகர பாலிகா பரிஷத்தானது நகரில் கிட்டத்தட்ட பதினைந்து உணவகங்களும், இருநூறு வீடுகளுமுள்ள ஒரு சிறு பகுதியில் மட்டும் கழிவு மேலாண்மை ஏற்றுக் கொண்டு நடத்துமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து அங்கும் இப்பணி நடந்ததது. ..இக்குழுவின் மிகச்செம்மையானபணி ,நகரமக்களிடயேயும் நகராட்சி அதிகாரிகளிடையேயும் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
.இதனால் ,முஸ்ஸூரி நகராட்சியின் பதின்மூன்று வார்டுகளையும் கீன் அமைப்புக்கே வழங்கிப் பராமரிக்கக் கோரப்பட்டது. முதலில் ஆறு பேருக்கு வாழ்வு கொடுத்த எங்கள் அமைப்பு, தற்போது நூற்றிமுப்பத்து நால்வருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்; .இந்தத் தொகுதி எம்எல்ஏ, நகராட்சி அதிகாரிகளின் அனுசரணையான போக்கு எங்களுக்கு மிகவும் உதவியது என்கிறார், டானா க்ரைடர்.

நகரின் கழிவு மேலாண்மை இலக்கை அடைய, இங்குள்ள உணவகங்கள் புதியதொரு கட்டமைப்பு, அதற்குப் பணியாளர்களுக்குப்பயிற்சி முதலியவை தவிர,ஹோட்டல்களின் அறைகளுக்கு விதிக்கும் கட்டணக்கூறுகளையும் மாற்றியாக வேண்டியிருந்தது.
ப்ரென்ட்வுட் ஹோடெல்ஸின் மேலாளராகப் பணி புரியும் ஸாஹ்னி, “ ஒட்டுமொத்த ஹோட்டல் தொழிலே வேறுமாதிரியானதொரு அமைப்பிற்கு மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. .புதிதாக ஏற்பட்ட செலவுகள் எங்களை எல்லாம் மிகவும் பயமுறுத்தின. இப்போது திரும்பிப்பார்த்தால்,அது ஒரு பெரிய பொருட்டாகவே தெரியவில்லை. கீன் க்கு மாதாமாதம் கொடுக்க வேண்டிய கட்டணம் ; ஒரே ஒரு குப்பைக்கூடை வைத்த இடத்தில், ஈரக்கழிவுகளுக்கு ஒன்றும், மற்றவற்றிற்கு ஒன்றும் என இரண்டு கூடைகள்; ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுமட்டுமின்றி, அவர்களை மேற்பார்வை செய்வது என்று அதிகச்சுமை. சில பெரிய ஹோட்டல்கள் அவரவர் இடங்களிலேயே உரக்குழிகள் அமைத்துக் கொண்டன; அறைகளில் உபயோகித்துத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்றி, கண்ணாடி பாட்டில்கள் வைத்தோம் – இதற்குத் தேவையான குடி நீர் சுத்திகரிப்பு வசதிகளமைப்பதில், ஒவ்வொரு அறைக்கும் எழுபதிலிருந்து எண்பது ரூபாய் வரை ஹோட்டலின் [ தரத்தை பொறுத்து ] அறை வாடகை அதிகரிக்க வேண்டியிருந்தது
முஸ்ஸூரி நகராட்சியின் நிர்வாக அதிகாரியான அசுதோஷ் ஸாத்தி, மேலாண்மையின் பிரத்தியேகக்குறிப்புகளை எங்களுக்கு விளக்கினார். “ தினந்தோறும்,பன்னிரண்டிலிருந்து இருபது டன் வரை கழிவுகள் சேரும் – இது சுற்றுலாப்பயணியரின் எண்ணிக்கையைப்
பொறுத்திருக்கிறது. தரம் பிரிப்பது கட்டாயமாக்கப்பட்டபின், மொத்தமுள்ள பதின்மூன்று வார்டுகளில், ஒன்பதிலாவது மிகச்சரியான முறையில் தரம் பிரிக்கிறார்கள் என வைத்துக்கொள்ளலாம் – சரியான முறையில் தரம் பிரிப்பதுதான் நாங்கள் முதலில் கவனிப்பது. – அதன்பின் ஊருக்குள் அதைச் சேகரிப்பது – இது எங்களுக்குக்கடினமே அல்ல – கடைசியில் டெஹ்ராடூனுக்கு, அங்கேயுள்ள கழிவு பதப்படுத்தும் ஆலைக்கு அனுப்பி வைப்பது – இதற்குத்தான் எங்களுக்கு செலவு இப்போது அதிகமாகிறது. தற்சமயம், கழிவு சுத்திகரிப்புக்கு எங்களுடைய பட்ஜெட் வருடத்திற்கு நான்கு கோடி.. – ஆனால் கூடிய சீக்கிரமே, உள்கட்டமைப்பை சீர்படுத்தி எங்கள் செலவைக் குறைக்கவிருக்கிறோம்.
டாக்டர் ராஜேஷ் குமார் சிங், விவரித்துக்கூறுகையில் ; பையோமீதனைஸேஷன் ஆலை ஒன்றும் ஒரு பைரோலிசிஸ் ஆலை ஒன்றும் [ BIOMETHANISATION AND PYROLYSIS PLANTS ],முஸ்ஸூரீயில் அரை ஏக்கர் நிலத்தில் ஏற்படுத்த ஏலங்கள் அழைத்திருக்கிறோம். அரசாங்கத்திலிருந்து எங்களுக்கு இரண்டு கோடி அறுபத்துமூன்று லக்ஷம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். இது வந்தால் டேஹ்ராடூனுக்கு மறுசுழற்சிக்காக நாங்கள் அனுப்பும் 12 – 18 டன் கழிவுகள் பாதியாகக் குறையும் .என்றார்.

தற்சமயம்,சுத்திகரிப்பில் முதன்மைப்பங்குள்ள உள்ளூர் மக்களுக்கு, இந்தப் புதிய அமைப்பு மிக வசதியானதாக இருக்கிறது.- விடுதிகளும் உணவகங்களும் இம்முறையை பின் பற்றுவதால் வரும் பயணியருக்கும் எளிதாகிறது. அடுத்த சவால் – ஒரு நாள் அல்லது ஒரு வேளை வந்து போகும் சுற்றுலாப்பயணியர் ஆங்காங்கே வீசியெறிந்துவிடும் பிளாஸ்டிக் பாட்டில்களையும், மற்றக்குப்பைகளையும் சேகரிப்பது தான். சாதாரணமாக இப்படிக் காலையில் வந்து மாலைக்குள் திரும்பிவிடும் குழுக்கள், தம்முடன் பிளாஸ்டிக் பாட்டில்களில் வரும் குடி நீரையும், பொதிந்து வரும் உணவுப்பண்டங்களையும்தான் அதிகமாக எடுத்துவருவர். அங்கேயே கழிவுகளையும் வீசி எறிந்தும் செல்வர் – இவ்வகைக் குப்பைகள்தான் மலைப்பகுதிகளில் இருந்து அகற்றுவதற்குக் கடினமானவை. மக்களுக்கு விழிப்புணர்வூட்டிப் பிரச்சாரங்கள் நடத்தவும் ஆங்காங்கே சுவரொட்டிகள் வைப்பதற்கும் நகராட்சி தீர்மானித்திருப்பதாக டாக்டர் சிங் கூறுகிறார்.
மற்றச் சவால்களைப்பற்றித் தெரிந்துகோள்ள : எங்கள் கண்ணோட்டத்தில் எல்லா மலைப்பகுதிகளிலும் கற்றுக்கொண்டவை என்பதையும், ஒவ்வொரு நகரிலும் தெரிந்து கொண்ட தனிப்பட்ட விஷயங்கள் பற்றியும் கீழேயுள்ள லிங்க் களை க்ளிக் செய்யவும் :
முஸ்ஸூரீயில் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் : சிறிதாக ஆரம்பித்துத் தளர்ந்து விடாமல், மக்களும் அரசு அதிகாரிகளும் ஒன்று சேரும் வரைத் தொடர்ந்து செயலாற்ற வேண்டும்
ஆசிரியர் : ஜேகப் செரியன் – ஜூலை 10, 2021.
தமிழாக்கம் : காமாக்ஷி நாராயணன்