அந்தரத்தில் ஊசலாடும் கல்வி

2020ல் பலதரபட்ட முடக்குதல் (லாக்டவுன்)காரணமாக, உலகமுழுதும் பள்ளிகள் கல்விப்பணிகளைத்தொடர இணையதளம் மூலம் கடும்முயற்சி எடுத்தன. கோடைக்கானலின் 2021 மாஸ்டர்பிளான்படி, இங்கு 23 பள்ளிகள்உள்ளன. அவை எல்லாம் நோய்ப்பரவலினால் ஏற்பட்ட விளைவுகளை எதிர்கொள்ளப் பலவிதமானமாற்றங்களை 2021ல் மேற்கொண்டுள்ளன. சிலருக்கு,இணையக்கல்வியானது சிறந்தமுறையில் படிப்பிப்பதற்கும் படிப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது. மற்றவர்களுக்கு, இணையதள(internet)வசதியின்மை, கணினி(கம்ப்யூட்டர்) / ஸ்மார்ட்போன்இல்லாதது, மின்வழிகற்றல்(ஆன்லைன் லர்னிங்) இல்லாமை, முதலியவற்றால் கல்வி என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

வித்யா(பெயர்மாற்றம்) என்கிற,11வது வகுப்புமாணவி : “நெட்வொர்க்சரியில்லாவிட்டால் வகுப்பு கிடைக்காதுஅந்தப்பாடங்களைத் தவறவிட்டதால் பின்வருபவை புரியாது; இணையம் மூலம் ஆசிரியர்கள் சொல்வதைப்புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால் பதில் அளிப்பது சுலபமல்லஎன்கிறார். சிலபள்ளிகள் ஒரே பாடத்திற்கு 4 மணிநேரம் ஒதுக்குகின்றனஅவ்வளவு நேரம் கம்ப்யூட்டரையோ போனையோ உற்றுப்பார்த்துகொண்டிருப்பது கடினமாக இருப்பதும், அதன் மற்றொரு சிரமம் என்று விளக்குகிறார்.

ஷண்பகனூர் பள்ளிமாணவர் ஒருவரின் தந்தை, லாலா மானுவெல் கூறுவதாவது: “இணையதளகல்வி என்பதால் பெற்றோரும் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டியுள்ளது; மாணவர் சரிவரப்பயன்படுத்துவதற்குப் பாடங்களை எழுதி ஞாபகம்வைத்துக் கொள்வதற்கு, பெற்றோரின் பங்கு நிறைய வேண்டியிருக்கிறது. அதிகம் படிக்காதவர்களும், விவசாயிகளும் தங்கள் பிள்ளைகளுக்குப் பாடம்கற்றுக்கொடுக்கமுடிவதில்லை. மேலும், இணையதள (ஆன்லைன்) பாடத்திட்டங்களும், ஒளித்திரைமூலம்கேள்வி/ பதில் வகுப்புகளும் நடப்பதால், கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல், இணையத்திலிருந்து பதில்களை காபிபேஸ்ட் செய்துவிடுவதாலும் ஆழ்ந்துபடிப்பதில்லைஎன்கிறார். இதனால் மாணவர்களின் ஞாபகத்திறன் குறைவதாக அவர் எண்ணுகிறார்.

இம்மாதிரியான பல குறைபாடுகளைச் சரிசெய்ய மானுவெல் தன் மகனைக் கூடுதல் பயிற்சிவகுப்புக்களுக்கு அனுப்பவேண்டியிருக்கிறது.

பல பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புக்கள் 6ம் வகுப்பு உள்பட மற்ற மேல்வகுப்பு மாணவருக்குத்தான் உள்ளன. மற்ற கீழ்நிலைப் பள்ளிசிறுவர்கள் பள்ளிக்கூடமும் இணையதளவகுப்புகளும்கூட இல்லாததால் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்கிறார்கள்! –இதனால் ,“ஏழ்மையிலிருந்து வெளிவரக்கல்வி தேவை என நம்பித் தம் குழந்தைகளைப் பள்ளிக்கனுப்பும் பெற்றோர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்என்கிறார் வேக்டேல்ஸ் (WAG TALES) என்னும் கதை மூலம் கல்வி கற்பிக்கும் நிறுவனத்தை நடத்தும் கோடைவாசிசதீஷ் டிஸா.     

சில பள்ளிகள் இச்சிக்கலைத் தாண்டிவிட்டன. கோடைக்கானல் கிரிஸ்டியன் காலேஜ் (KCC] நடத்தும் சாம்ஆபிரஹாம் வழக்கமான வகுப்புக்களைவிட, ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவது மிகவும் சுலபம், ஏனென்றால் பாடங்களைத் திட்டமிட்டபடி முன்னதாகவே முடித்துவிடமுடிகிறது என்கிறார். கோடைக்கானல் கிரிஸ்டியன் காலேஜின் மாணவர்களுக்கு ஆன்லைன்கல்வி ஏற்கனவே பரிச்சயமானதால், இம்மாற்றம் மிக எளிதாகிவிட்டது; அவர்களால் மற்ற நேரத்தில் கிருஸ்துமஸ்நாடகம், ஆன்லைன் விளையாட்டுப்போட்டிகள் முதலியவைகளிலும் பங்கேற்கமுடிகிறது.

இந்தியாவில் முதல்முதலாகசர்வதேசபக்காலாரேட்” (INTERNATIONAL BACCALAUREATE) படிப்பை ஆரம்பித்த கோடைக்கானல் சர்வதேசபள்ளியின் (KODAIKANAL INTERNATIONAL SCHOOL) தலைமைஆசிரியர், கோர்லெ ஸ்டிக்ஸ்ரட்(Corleigh Stixrud), அவர் பள்ளியில், தனிமைப் படுத்தப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களுடன் இணைக்க, ஆன்லைன் கல்வி ஒரு பெரிய வரப்ரசாதம் என்கிறார். மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்தவும் இணையம் வெகுவாக உதவுகிறது.  2020ம் வருடம் இணையதளம் மூலம் ஏழைகளுக்கு நிதி திரட்டவும், படிப்பு முடிந்து வீடு திரும்பிய மாணவர்களுடன் தொடர்புகொள்ளவும் முடிந்தது என்கிறார்கள் பள்ளிநிர்வாகிகள்.

12ம் வகுப்பில்சேர்ந்தமாணவர்ஒருவர், இங்கு பள்ளிக்கு வராமலேயே பாடங்கள் கற்றுத் தேர்ச்சி பெற்றுள்ளது ஆன்லைன் கல்வியினால்தான் சாத்தியப்படுகிறது என்றும் கூறுகிறார். கூகிள்வகுப்பறை (GOOGLE CLASS ROOM) போன்ற,  இணயதளபள்ளிகள் மூலம் இங்குள்ள ஆசிரியர்களுக்கு நல்ல பயிற்சி இருப்பதால் இம்மாற்றம் எளிதாகிவிட்டது.

கோடை சர்வதேச பள்ளியில் பயிலும், 10ம்வகுப்பு மாணவரான அவீவ், ஆன்லைன் வகுப்புகளைப் பெரிதும் விரும்புகிறார்அவற்றால் நேரம் அதிகம் கிடைப்பதாகக்கூறும் அவீவ், மற்ற நகரங்களைப் போல் கோடைக்கானலில் வீட்டிற்குள் அடைந்து கிடக்க வேண்டியதில்லை, மனஉளைச்சலும்இல்லை.  நமது எதிர்காலம் இப்படித்தான் இருக்கப்போகிறது என்று புரிந்து செயல்படுவதுதான் நல்லது என்கிறார்.

வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் வழக்கத்திற்கு மாறான தீர்வுகள்தான் தேவை. சில கல்வியாளர்கள், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்களை வெகுவாகப் புறக்கணித்துவிட்டனர். கோடைக்கானலில் ஒரு பள்ளியின் அறங்காப்பாளராக (ட்ரஸ்டி) உள்ள கருணாஜென்கின்ஸ், “மாணவர்கள் பாடத்திட்டங்களை விடுத்து, தங்களுடைய சக நண்பர்களுடனும், ஆசிரியர்களுடனும் ஒருங்கிணைந்து நேரடியாக, ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவதின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

எனது பள்ளி சத்யசுரபி(My School SatyaSurabhi), என்னும் இலவசபள்ளியின் தலைமை அறங்காப்பாளர், பத்மினிமணி, தன்னுடய பள்ளிக்கான இணயதளத் தொடர்பு சரிவர இயங்காததால், பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தமுடியாமைக்கு வருத்தப்பட்டார். அதற்கு பதிலாக மாணவர்களுக்கு, அவரவர் வீட்டிலேயே இருந்தபடி, ஆசிரியர்கள் மேற்பார்வையில், நல்ல திட்டங்களை (மழைநீர் சேமிப்பு, நீர்த்தேக்கங்களின் சுத்திகரிப்பு) பற்றிக் கற்றுகொள்வதும், கைவேலைப்பாடுகள் (பிளாஸ்டிக்வயர்கொண்டுபைகள்செய்வது) கற்று, அந்தப்பொருள்களை (200க்கும்மேற்பட்ட பைகளை), கடைகளில் விற்பனை செய்யவும் உதவுகிறார்கள்.

புகைப்படம்: உபயம் பத்மினி மணி

2021 நடுவில் துவங்கும் அடுத்த கல்வியாண்டில், கொரோனா நோய்த் தாக்கத்தின் இரண்டாவது அலையின் கடுமையினால், தொலைதூரக்கல்வி (Distance learning) இன்றியமையாததாகிவிடவும் குடிமக்களனைவருக்கும் தடுப்பூசிசெலுத்தினாலும், 2022லும் தொடர்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது என்பதே பலரின் கணிப்பு. நோய்ப்பரவல் நீங்கும் வரையிலாவது மாணவர் தம்மை இத்தகைய இணைய வகுப்புகளுக்குத் தயார் செய்து கொள்வது அவசியமாகிறது.

ஆன்லைன்கற்றலுக்குஒருவழிகாட்டி :

இணையத்தில் கற்றுக்கொள்வதற்குப் பலவாறான இணயதளங்களும், பயன்பாடுகளும் இருந்தாலும் அவை  அனேகமாக ஆங்கிலத்திலேயே உள்ளன. பிராந்தீயமொழிகளில் குறைவேதமிழைக் கல்விமுறையாக கொண்டவர்களுக்கு இது ஒரு கூடுதல் தடைதான்.

தமிழில்உள்ளசிலபயன்பாடுகள் :

கல்விTV: :தமிழக அரசாங்கத்தின் தொடக்கமுயற்சியாக ஆரம்பத்தில் யூட்யுபிலும், பிறகு ஏர்டெல்டிடிஎச், மற்ற சிலகேபிள்நெட்வொர்க்கிலும், ,  கிடைக்கும்; மற்றவை போலன்றி இதற்கு இணையவசதி தேவை இல்லாதலால், இணையக்குறைபாடு தவிர்க்கப்படுகிறது. 5திலிருந்து 12ம் வகுப்புவரையும், நீட்(NEET), ஜெயியி(JEE) போன்ற தேர்வுகளுக்கும் தமிழில் படிக்கமுடியும்.

யூட்யுபில்கல்வி TV கிடைக்கும். (https://www.youtube.com/channel/UCTMjO0AVI__8bnjTiK3JyPw)

தமிழில் இணையவசதிகள் :

சிறுவர்களுக்கேற்ற மாதிரி தமிழ் மூலம் ஆங்கிலம் கற்பிக்கப் பல்வேறு பாடங்கள் உள்ளன :

SPICE TV :  3 லிருந்து 6 வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படைக் கணிதக்கல்வி.

(https://www.youtube.com/channel/UCVp4TF9w-W16tSFA6LBZvTA)

SRMJV GROUP OF SCHOOLS – முக்கியமாக 2லிருந்து 12ம் வகுப்புவரை CBSC பாடத்திட்டத்தில்உள்ளது.

(https://www.youtube.com/user/srmjv96/videos)

ஆசிரியம் {ASIRIYAM} – பொதுஅறிவு, கணிதம், ஆக்கபூர்வமானவிஷயங்கள்

2 லிருந்து 12ம் வகுப்புவரை.

(https://www.youtube.com/c/Asiriyam/videos)

மிஷிகாகார்த்திக்: இது சிறுகுழந்தை ஒன்று தன்னை ஒத்தவர்க்குக் கற்பிப்பது போல் அமைந்ததால், குழந்தைகளுக்கு ஏற்புடையதாகவிருக்கும்.

1ம் வகுப்பிலிருந்து 3ம் வகுப்புவரை கணிதம், விஞ்ஞானம்,

சமூகவியல், பூகோளஇயல், பொதுஅறிவு, முதலியவை.

(https://www.youtube.com/channel/UCTMqMWymozo6KZjWtGa-wWA/videos)

தமிழரசி : LKG,1,2ம் வகுப்புகளுக்கு ஆங்கிலம் / தமிழ்  கற்பிக்க ஏதுவானது.

(https://www.youtube.com/channel/UCTMqMWymozo6KZjWtGa-wWA/videos)

ஆசிரியரைப்பற்றி :

ரேஷம்ஜார்ஜ்நாடகவியல் / ஆங்கிலஆசிரியர்; ஆன்லைன் வகுப்புகளுக்குப் பாடத்திட்டங்கள் வகுப்பவர்; கோடை சர்வதேசபள்ளி (KIS), வசந்த் வேல்லி பள்ளி(VASANT VALLEY SCHOOL), என் பள்ளி சத்யசுரபி, சீனாவிலுள்ள சீவே ஓவர்ஸீஸ் சைனீஸ் அகாதமி (CHIWAE OVERSEAS CHINESE ACADEMY) போன்ற பல பள்ளிகளில் பணிபுரிந்தவர்;  என் குருஎன்ற மொழிக்கல்விப் பயன்பாட்டை(language application) உருவாக்குவதிலும் பணியாற்றியுள்ளார்.

தமிழாக்கம்:  காமாக்ஷி நாராயணன்.

Resham George

Resham George is an English and drama teacher, and an online education content creator. She has taught at Kodaikanal International School, Vasant Valley School, My School Satya Surabhi, and Overseas Chinese Academy, Chiway, China. She has also worked with the language learning app Enguru.

Leave a Reply

Your email address will not be published.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Previous Story

கோவிட் 19 தொற்று இருக்கிறது என்று எப்படித்தெரியும் – அடுத்து என்ன செய்வது ?

Next Story

கோவிட் தொற்று வராமல் காப்பது எப்படி ?